For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மசாலா ரவா இட்லி

By Maha
|

டயட்டில் இருப்போர் காலை வேளையில் பெரும்பாலும் ஓட்ஸைத் தான் காலை உணவாக எடுத்து வருவார்கள். ஆனால் அந்த ஓட்ஸிற்கு சிறந்த மாற்றாக மசாலா ரவா இட்லி இருக்கும். மேலும் இந்த இட்லியானது செய்வது மிகவும் ஈஸி. பேச்சுலர்கள் கூட இதனை முயற்சிக்கலாம்.

சரி, இப்போது அந்த மசாலா ரவா இட்லியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Masala Rava Idli

தேவையான பொருட்கள்:

ரவை - 3 கப்
பட்டாணி - 1/2 கப் (வேக வைத்தது)
எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1 டீஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
தயிர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, கடலைப் பருப்பு, மிளகாய், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் பச்சை பட்டாணி மற்றும் ரவையை சேர்த்து சிறிது நேரம் வறுக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி குளிர வைத்து, அதில் தயிர் மற்றும் உப்பு சேர்த்து இட்லி மாவு பதத்திற்கு கலந்து 10 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு இட்லி பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, அடுப்பில் வைத்து நீரானது நன்கு கொதித்ததும், இட்லி தட்டில் மாவை ஊற்றி பாத்திரத்தினுள் வைத்து 6 நிமிடம் வேக வைத்து இறக்கினால், மசாலா ரவா இட்லி ரெடி!!!

English summary

Masala Rava Idli

Take a look at this special masala rava idli for breakfast. Try this special treat if you are diabetic.
Story first published: Friday, October 17, 2014, 16:25 [IST]
Desktop Bottom Promotion