For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மசாலா முட்டை புர்ஜி

By Maha
|

பொதுவாக டயட்டில் இருப்பவர்கள் முட்டையை காலை வேளையில் சாப்பிடுவார்கள். அத்தகையவர்கள் எப்போதுமே ஒரே மாதிரியாக முட்டையை செய்து சாப்பிடாமல், சற்று வித்தியாசமாக செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

குறிப்பாக மசாலா முட்டை புர்ஜி ஏற்றதாக இருக்கும். சரி, இப்போது அந்த மசாலா முட்டை புர்ஜியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Masala Egg Bhurji Recipe

தேவையான பொருட்கள்:

முட்டை - 5
பன்னீர்/சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
சாட் மசாலா - 1 சிட்டிகை
எண்ணெய் - 2-3 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயம் சேர்த்து வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளற வேண்டும்.

வெங்காயம் பொன்னிறமானதும், அதில் பச்சை மிளகாய், தக்காளி மற்றும் துருவிய பன்னீர்/சீஸை சேர்த்து, 2-3 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின்னர் உப்பு, மிளகு தூள், மிளகாய் தூள் மற்றும் சாட் மசாலா சேர்த்து நன்கு கிளற வேண்டும்.

பின்பு அதில் முட்டையை உடைத்து ஊற்றி, நன்கு கிளறி, ஒரு 5 நிமிடம் முட்டை வேகும் படியாக செய்து, பின் இறக்க வேண்டும்.

இப்போது சுவையான மசாலா முட்டை புர்ஜி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியை தூவி பரிமாறவும்.

English summary

Masala Egg Bhurji Recipe | மசாலா முட்டை புர்ஜி

Egg bhurji is one of the best egg recipes everywhere. Here is the masala egg bhurji in Mumbai style. Check out the lip smacking masala egg bhurji recipe.
Desktop Bottom Promotion