For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மசாலா தோசைக்கு தேவையான உருளைக்கிழங்கு மசாலா

By Maha
|

தென்னிந்தியாவில் தோசை மிகவும் பிரபலமான ரெசிபிக்களுள் ஒன்று. இந்த தோசை மிகவும் ஆரோக்கியமான உணவுகளுள் ஒன்று. அத்தகைய தோசையில் பல வகைகள் உள்ளன. அதில் மசாலா தோசை தான் மிகவும் பிரபலமானது.

அந்த மசாலா தோசைக்கு தேவையான மசாலாவை எளிமையான முறையில் எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து தெரிந்து கொண்டு, வீட்டில் அருமையான சுவையில் மசாலா தோசை செய்து செய்து சாப்பிடுங்கள்.

Masala For Dosa Recipe

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 6
வெங்காயம் - 2 (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நறுக்கிய உருளைக்கிழங்கு போட்டு, 2 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு விசில் போனதும், உருளைக்கிழங்கை வெளியே எடுத்து, தோலை உரித்துவிட்டு, நன்கு மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வெங்காயம் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும்.

அடுத்து மஞ்சள் தூள் மற்றும் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு சேர்த்து, லேசாக தண்ணீர் தெளித்து, 2 நிமிடம் வதக்கி இறக்க வேண்டும்.

இப்போது நொடியில் மசாலா தோசைக்கு தேவையான சுவையான உருளைக்கிழங்கு மசாலா ரெடி!!!

குறிப்பு:

வேண்டுமெனில் இந்த மசாலாவை சாதாரண தோசைக்கும் தொட்டுக் கொள்ளலாம்.

English summary

Masala For Dosa Recipe | மசாலா தோசைக்கு தேவையான உருளைக்கிழங்கு மசாலா

The filling or masala of dosa is prepared with boiled potatoes, Indian spices especially turmeric powder and mustard seeds. And is very easy to prepare. Check out the masala of dosa recipe.
Story first published: Thursday, April 18, 2013, 10:15 [IST]
Desktop Bottom Promotion