For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மலபார் ஸ்டைல்: பசலைக்கீரை பருப்பு

By Maha
|

பசலைக்கீரையில் இரும்புச்சத்து மற்றும் புரோட்டீன் அதிகம் உள்ளது. எனவே இரத்த சோகை உள்ளவர்கள், இந்த கீரையை உணவில் அதிகம் சேர்த்து வந்தால், இரத்தணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கலாம். அதிலும் இதனை இரத்த சோகை உள்ளவர்கள் மட்டும் சாப்பிட வேண்டும் என்பதில்லை. அனைவருமே வாரத்திற்கு 2-3 முறை பசலை அல்லது வேறு ஏதேனும் ஒரு கீரையை சமைத்து சாப்பிட்டால், உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக் கொள்ளலாம்.

இப்போது அந்த பசலைக்கீரையை மலபார் ஸ்டைலில் எப்படி சமைப்பது என்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து அதனை வீட்டில் முயற்சி செய்து பாருங்கள். இது செய்வது மிகவும் எளிது. ஆகவே பேச்சுலர்கள் கூட சமைக்கலாம். சரி, இப்போது அந்த மலபார் ஸ்டைல் பசலைக்கீரை பருப்பு ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Malabar Spinach Dal Recipe For Anemics

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப்
பசலைக் கீரை - 2 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1/2 டீஸ்பூன் (துருவியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
புளி சாறு - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

தாளிப்பதற்கு...

கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பூண்டு - 3-4 பல் (நசுக்கியது)
வரமிளகாய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை நீரில் நன்கு கழுவி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, பசலைக் கீரை, இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் ஊற்றி, மூடி வைத்து 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அதனை திறந்து, குளிர வைக்க வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் ஆகியவற்றை போட்டு தாளித்து, பின் கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பூண்டு போட்டு 2 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

அடுத்து அதில் வேக வைத்துள்ள பசலைக்கீரை கலவையைப் போட்டு கிளறி, புளி சாற்றினை ஊற்றி, 6-7 நிமிடம் தீயை குறைவில் வைத்து நன்கு கொதிக்கவிட்டு இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான பசலைக்கீரை பருப்பு ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Malabar Spinach Dal Recipe For Anemics

Malabar spinach dal is a high protein and iron rich recipe which is just perfect for anemics. The healthy and tasty combination of dal with the juicy spinach makes this recipe simply irresistible. So, try out this delicious recipe of Malabar spinach dal and fight your iron deficiency with this lip smacking delight.
Story first published: Saturday, August 31, 2013, 14:54 [IST]
Desktop Bottom Promotion