For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆரோக்கியத்தைத் தரும் ராகி உப்புமா

By Maha
|

பெரும்பாலான வீடுகளில் காலையில் இட்லி, தோசைக்கு அடுத்தப்படியாக உப்புமா தான் காலை உணவாக இருக்கும். அத்தகைய உப்புமாவிலேயே பல வகைகள் உள்ளன. அதில் ஒன்று தான் ராகி உப்புமா. இந்த உப்புமா ரவையை கொண்டு செய்யப்படும் உப்புமாவை விட மிகவும் ஆரோக்கியமானது.

மேலும் மிகவும் ஈஸியாக செய்யக்கூடியதும் கூட. குறிப்பாக இந்த உப்புமாவானது எடையை குறைக்க நினைப்போருக்கு மிகவும் உகந்த காலை உணவாகும். சரி, இப்போது அந்த ராகி உப்புமாவை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Light & Healthy Ragi Upma Recipe

தேவையான பொருட்கள்:

ராகி மாவு - 2 கப்
தயிர் - 1/2 கப்
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
உப்பு - தேவையான அளவு
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
கடலைப் பருப்பு - 1 டீஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
துருவிய தேங்காய் - 1/2 கப்
கொத்தமல்லி - சிறிது

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் ராகி மாவு, உப்பு, சர்க்கரை மற்றும் தயிர் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். குறிப்பாக இதனை பேஸ்ட் போல் கலக்காமல், ஈரமாக இருக்கும் மாவு போல் கலந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, கடலைப் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு அதில் ராகி மாவை சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி, தீயை குறைவில் வைத்து தொடர்ந்து கிளறி விட வேண்டும்.

பின் உப்புமா போன்ற பதத்தில் வரும் போது, அதில் துருவிய தேங்காய் மற்றும் கொத்தமல்லி தூவி கிளறி இறக்கினால், ராகி உப்புமா ரெடி!!!

English summary

Light & Healthy Ragi Upma Recipe

This morning try out the healthy ragi upma recipe. It is delicious, light and tummy filling. Here is how you prepare the yummy ragi upma.
Story first published: Thursday, September 25, 2014, 19:05 [IST]
Desktop Bottom Promotion