For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை ரசம்

By Maha
|

கர்ப்பமாக இருக்கும் போது ரசத்தை விட சிறந்த சுவை வேறு எதுவும் இருக்காது. அதிலும் அந்த சூடான ரசம், நல்ல புத்துணர்ச்சியை தருவதோடு, உடலுக்கு ஆரோக்கியத்தையும், சுவையையும் தரும். குறிப்பாக கர்ப்பிணிகளுக்கு புளிப்புச் சுவை என்றால், மிகவும் பிடிக்கும். எனவே புளிப்புச் சுவையுடைய எலுமிச்சையை வைத்து, ஆரோக்கியமான முறையில் ஒரு ரசத்தை செய்து கொடுத்தால், நன்றாக இருக்கும்.

சரி, இப்போது அந்த எலுமிச்சை ரசத்தை எப்படி செய்துவதென்று பார்ப்போமா!!!

Lemon Rasam

தேவையான பொருட்கள்:

துவரம் பருப்பு - 1 கப் (மஞ்சள் தூள் மற்றும் எண்ணெய் சேர்த்து வேக வைத்தது)
சீரகம் - 1 டீஸ்பூன் (பொடி செய்தது)
மிளகு - 1 டீஸ்பூன் (பொடி செய்தது)
கறிவேப்பிலை - சிறிது
பச்சை மிளகாய் - 1 (கீறியது)
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
எலுமிச்சை - 1 (1 கப் சாறு எடுத்தது)
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 2 1/2 கப்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 1/4 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
சர்க்கரை - 1 டீஸ்பூன்

செய்முறை

முதலில் வேக வைத்துள்ள துவரம் பருப்பை நன்கு மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, பெருங்காயத் தூள், சீரகப் பொடி, மிளகு பொடி, கறிவேப்பிலை, பச்சை மிளகாய், மஞ்சள் தூள் சேர்த்து வதக்க வேண்டும்.

பிறகு 2 கப் தண்ணீர் சேர்த்து, தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்.

பின்பு அதில் மசித்து வைத்துள்ள துவரம் பருப்பு, சர்க்கரை, உப்பு சேர்த்து நன்கு கலந்து, கொதிக்க விடவும்.

பின் சிறிது நேரம் கழித்து, அடுப்பை அணைத்துவிட்டு, அதில் எலுமிச்சை சாற்றை சேர்த்து கலந்து, கொத்தமல்லியைத் தூவ வேண்டும்.

இப்போது சுவையான எலுமிச்சை ரசம் ரெடி!!!

English summary

Lemon Rasam Recipe | எலுமிச்சை ரசம்

There is nothing like the tasty rasams when you are pregnant. The hot rasam rice is very energizing, healthy, non spicy and very yummy to eat. Take a look to know how to go about with the lemon rasam.
Desktop Bottom Promotion