For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

எலுமிச்சை ஓட்ஸ் ரெசிபி

By Maha
|

நீரிழிவு நோயாளிகள் உணவில் கவனமாக இருக்க வேண்டும் என்பதால் அவர்கள் எதை சாப்பிடுவது என்று தெரியாமல் தினமும் ஒரே மாதிரியான உணவை சாப்பிடுவார்கள். ஏனெனில் கொஞ்சம் தவறான உணவை சாப்பிட்டாலும், அவர்களது இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரித்துவிடும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை, அத்தகையவர்களுக்காக ஒரு அருமையான காலை உணவைக் கொடுத்துள்ளது.

அந்த ரெசிபியின் பெயர் எலுமிச்சை ஓட்ஸ். இந்த ரெசிபி செய்வது மிகவும் எளிது. இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போம்.

Lemon Oats Recipe For Diabetics

தேவையான பொருட்கள்:

ஓட்ஸ் - 2 கப்
தண்ணீர் - 1 கப்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
வேர்க்கடலை - 1 டேபிள் ஸ்பூன் (வறுத்தது)
கடுகு - 1 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கடலைப்பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
வரமிளகாய் - 1 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப்பருப்பு சேர்த்து லேசான பொன்னிறத்தில் வறுக்க வேண்டும்.

பின்பு பச்சை மிளகாய், வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து வதக்கி, தீயை குறைவில் வைத்து பெருங்காயத் தூளை சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு மஞ்சள் தூள், தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.

கலவையானது கொதித்ததும், அதில் ஓட்ஸ் சேர்த்து கிளறி விட்டு, தீயை குறைவில் வைத்து ஓட்ஸை வேக வைக்க வேண்டும்.

ஓட்ஸானது வெந்ததும், அதனை இறக்கி, அதில் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, மேலே வேர்க்கடலையை தூவினால், சுவையான எலுமிச்சை ஓட்ஸ் ரெடி!!!

English summary

Lemon Oats Recipe For Diabetics

Lemon oats is one of the recipes you should try out this morning. It is said that oats should be added to your daily diet as it is good for diabetic patients. take a look at the lemon oats recipe and enjoy the start of your day on a healthy note.
Story first published: Thursday, November 14, 2013, 19:29 [IST]
Desktop Bottom Promotion