For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சுரைக்காய் பக்கோடா

By Maha
|

மழைக்காலத்தில் மாலை வேளையில் நன்கு சூடாகவும், மொறுமொறுவென்று இருக்கும் வண்ணம் ஏதேனும் சாப்பிட வேண்டுமென்று தோன்றும். அப்போது வெங்காயம், உருளைக்கிழங்கு போன்றவற்றை மட்டும் பக்கோடா செய்து சாப்பிடாமல் சற்று வித்தியாசமாக, சுரைக்காய் கொண்டு பக்கோடா செய்து சாப்பிடலாம்.

இந்த சுரைக்காய் பக்கோடா செய்வது மிகவும் எளிமையானது. இப்போது அந்த சுரைக்காய் பக்கோடாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Lauki/Bottle Gourd Pakora

தேவையான பொருட்கள்:

சுரைக்காய் - 1 (தோலுரித்து, துருவியது)
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பல்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
கருப்பு உப்பு - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் துருவிய சுரைக்காய் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, 15-20 நிமிடம் ஊற வைத்து, பின் அதிலிருக்கும் நீரை பிழிந்து விட்டு, அதனை மற்றொரு பௌலில் போட்டுக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் கடலை மாவு, அரிசி மாவு, வெங்காயம், பச்சை மிளகாய், சாட் மசாலா, மிளகாய் தூள், மஞ்சள் தூள், கருப்பு உப்பு, கொத்தமல்லி மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, மென்மையாக பக்கோடா பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அந்த பக்கோடா மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான சுரைக்காய் பக்கோடா ரெடி!!! இதனை சட்னி அல்லது தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

English summary

Lauki/Bottle Gourd Pakora

If you want to make a crispy snacks in the evening time, then try Bottle Gourd/Lauki Pakora Recipe.
Story first published: Tuesday, July 9, 2013, 17:55 [IST]
Desktop Bottom Promotion