For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெண்டைக்காய் புலாவ்

By Maha
|

எப்போதும் மதிய வேளையில் சாம்பார், ரசம், புளிக்குழம்பு, பொரியல் என்று செய்து அழுத்துப் போய்விட்டதா? அப்படியெனில், மதிய வேளையில் வெண்டைக்காய் புலாவ் ரெசிபியை செய்து பாருங்கள். இதனால் வெண்டைக்காயில் உள்ள சத்துக்கள் உடலுக்கு கிடைத்தது போன்று இருப்பதோடு, மிகவும் சுவையான உணவாகவும் இருக்கும்.

வேண்டுமெனில் இந்த ரெசிபியை காலையில் பள்ளிக்கு செல்லும் குழந்தைகளுக்கு மதிய வேளையில் சாப்பிட செய்து கொடுக்கலாம். மேலும் பேச்சுலர்கள் சமைப்பதற்கு ஏற்றவாறு எளிமையான செய்முறையைக் கொண்டதும் கூட. சரி, இப்போது அந்த வெண்டைக்காய் புலாவ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Ladies Finger Pulav

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 1/2 கிலோ (நறுக்கியது)
தக்காளி - 4 (நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
அரிசி - 2 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் அரிசியைக் கழுவி குக்கரில் போட்டு, 4 கப் தண்ணீர் ஊற்றி 3 விசில் விட்டு இறக்கி, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெண்டைக்காயைப் போட்டு, பொன்னிறமாக வறுத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்க வேண்டும்.

அடுத்து தக்காளியைப் போட்டு, நன்கு மென்மையாகும் வரை வதக்கி விட வேண்டும்.

பின் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா மற்றும் உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, அதிலிருந்து எண்ணெய் தனியாக பிரியும் வரை வதக்க வேண்டும்.

இறுதியில் அதில் சாதத்தைப் போட்டு மசாலா அனைத்தும் சாதத்தில் இறங்கும் வரை கிளறி, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயைப் போட்டு, 10-20 நொடிகள் அடுப்பில் வைத்து பிரட்டி இறக்கினால், சூப்பரான வெண்டைக்காய் புலாவ் ரெடி!!!

English summary

Ladies Finger Pulav: Lunch Recipe

This afternoon, one of the best and most favourite vegetables can be put to test to make a different variety of rice. Okra or ladies finger can now be used to make a delicious rice pulav recipe for lunch.
Story first published: Friday, August 23, 2013, 12:43 [IST]
Desktop Bottom Promotion