For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபி

By Neha Mathur
|

என்ன ரெசிபியோட பெயரை கேட்டாலே ஒன்றும் புரியவில்லையா? இது வேறொன்றும் இல்லை, சாதாரணமான செய்யும் ஒரு ரெசிபி தான். ஆனால் இது ஒரு காஷ்மீரி ரெசிபி. இந்த ரெசிபியில் ஸ்பெஷல் என்னவென்றால், இதில் வெந்தயக்கீரை, பசலைக்கீரை மற்றும் பன்னீர் ஆகிய மூன்றையும் ஒன்றாக சேர்த்து வித்தியாசமான சுவையில் செய்வது தான். இதில் சமன் என்றால் பன்னீர் என்று அர்த்தம்.

இந்த ரெசிபி ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு ஆரோக்கியமான ரெசிபி என்றும் சொல்லலாம். சரி, இப்போது அந்த காஷ்மீரி மேத்தி சமன் ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

கடுகு எண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வெங்காயம் - 1 கப் (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3-4 (நீளமாக நறுக்கியது)
இங்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
வெந்தயக்கீரை - 100 கிராம்
பசலைக்கீரை - 100 கிராம்
உப்பு - தேவையான அளவு
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
ப்ரஷ் க்ரீம் - 4 டீஸ்பூன்
பன்னீர் - 200 கிராம் (துண்டுகளாக்கப்பட்டது)

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
செய்முறை

செய்முறை

* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெயை தடவி, அதில் பன்னீர் துண்டுகளைப் போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பசலை மற்றும் வெந்தயக் கீரையை நீரில் நன்கு அலசிக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பின் ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தண்ணீர் ஊற்றி காய்ந்ததும், 1 டேபிள் ஸ்பூன் உப்பு சேர்த்து, கீரைகளைப் போட்டு 2 நிமிடம் வேக வைத்து, இறக்கி தண்ணீரை வடிகட்டி, குளிர்ந்த நீரில் ஒரு முறை அலசி தனியாக வைத்துக் கொள்ளவும்.

* பின்பு அந்த இலைகளை நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

செய்முறை

செய்முறை

*அடுத்து மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.

* அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து, பச்சை வாசனை போக வதக்கி, பச்சை மிளகாய், மல்லி தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்கி, அரைத்து வைத்துள்ள கீரையை ஊற்ற வேண்டும்.

செய்முறை

செய்முறை

* பிறகு ஒரு கப் தண்ணீர் ஊற்றி, 3-4 நிமிடம் கொதிக்க விட்டு, சர்க்கரை, ப்ரஷ் க்ரீம், எலுமிச்சை சாறு மற்றும் கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் கிளறி, வறுத்து வைத்துள்ள பன்னீரை சேர்த்து மீண்டும் 1 நிமிடம் கிளறி இறக்க வேண்டும்.

* இப்போது அருமையான மேத்தி சமன் என்னும் வெந்தயக்கீரை பன்னீர் ரெசிபி ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Kashmiri Methi Chaman Recipe

Methi chaman is a traditional Kashmiri dish made by using fresh methi leaves and spinach leaves. Chaman is paneer in Kashmiri and this combination of methi, palak and paneer is a killer. Hence, Kashmiri methi chaman is a nutrient package as well. Get the ingredients ready and do give this recipe a try.
Story first published: Monday, September 30, 2013, 12:57 [IST]
Desktop Bottom Promotion