For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா

By Maha
|

ஹிந்தியில் பிந்தி என்றால் தமிழில் வெண்டைக்காய் என்று அர்த்தம். அத்தகைய வெண்டைக்காயை அதிகம் சாப்பிட்டால், ஞாபக சக்தி அதிகரிக்கும் என்று நம் முன்னோர்கள் கூறுவார்கள். ஆகவே பலரும் இதனை விரும்பி அதிகம் சாப்பிடுவார்கள். அதுமட்டுமின்றி, இதனை பச்சையாகக் கூட சாப்பிடலாம். அந்த அளவில் இதன் சுவை மிகவும் அருமையாக இருக்கும்.

இத்தகைய வெண்டைக்காயை பலரும் குழம்பு, சாம்பார், மசாலா என்று செய்வார்கள். இப்போது இவற்றில் கடாய் வெண்டைக்காய் மசாலா எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அது என்ன கடாய் வெண்டைக்காய் மசாலா என்று கேட்கலாம். அது வேறொன்றும் இல்லை, இதனை கடாயில் செய்வதால் தான், இதற்கு கடாய் மசாலா என்ற பெயர் வந்தது. சரி, செய்முறையைப் பார்ப்போமா!!!

Kadai Bhindi/Lady's finger Masala

தேவையான பொருட்கள்:

வெண்டைக்காய் - 12
வெங்காயம் - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
தக்காளி - 1 (அரைத்தது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
முந்திரி - 5
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

வெண்டைக்காயை கழுவி, துணியால் துடைத்து, ஓரளவு நீளமாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய வெண்டைக்காயை சேர்த்து 2 நிமிடம் வதக்கி அடுப்பை அணைத்து, வெண்டைக்காயை ஒரு தட்டில் போட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் முந்திரியை மிக்ஸியில் போட்டு, தண்ணீர் சேர்த்து பேஸ்ட் போல் நன்கு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து வெண்டைக்காய் வதக்கிய அதே கடாயை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, சீரகத்தை போட்டு தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2 நிமிடம் வதக்கி, அரைத்த தக்காளியை ஊற்றி, உப்பு சேர்த்த 2 நிமிடம் கொதிக்க விடவும்.

பிறகு மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள் சேர்த்து கிளறி, அரைத்து வைத்துள்ள முந்திரி பேஸ்ட் சேர்த்து 3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பின்னர் நறுக்கிய குடைமிளகாய் சேர்த்து, மற்றொரு 2 நிமிடம் பிரட்டி விட வேண்டும்.

பின் 1/2 கப் தண்ணீர் ஊற்றி, வதக்கி வைத்துள்ள வெண்டைக்காயை சேர்த்து, 5 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கடாய் பிந்தி/வெண்டைக்காய் மசாலா ரெடி!!! இதனை சாதம் அல்லது சாப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

English summary

Kadai Bhindi/Lady's finger Masala | கடாய் பிந்தி / வெண்டைக்காய் மசாலா

Kadai bhindi/lady's finger masala is a simple recipe with a tangy twist. In this recipe, lady's finger is cooked along with capsicum and tomato which adds a very different flavour to the dish and it is cooked with minimal use of spices which is a key factor in this recipe. This vegetarian recipe is perfect for a light dinner when served with chapatis or with rice.
Story first published: Tuesday, April 30, 2013, 11:39 [IST]
Desktop Bottom Promotion