For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பலாக்காய் கிரேவி

By Maha
|

அனைவரும் பலாப்பழத்தை ருசித்து சாப்பிடுவோம். ஆனால் பலாக்காயை பலருக்கு பிடிக்காது. இதற்கு காரணம் அதை சரியாக சமைத்து சாப்பிட தெரியாதது என்று தான் சொல்ல வேண்டும். அதிலும் இத்னை சரியான முறையில் கிரேவி, குழம்பு என்று செய்து சாப்பிட்டால், இது அசைவ உணவு போன்ற சுவையைக் கொண்டிக்கும்.

இங்கு அந்த பலாக்காயை கொண்டு எப்படி கிரேவி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் பார்ப்போமா!!!

Jackfruit Gravy Recipe

தேவையான பொருட்கள்:

பலாக்காய் - 250 கிராம் (தோலுரித்து, நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பூண்டு - 6-7 பற்கள் (தட்டியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் பலாக்காயை நன்கு கழுவி, 1 இன்ச் துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் பலாக்காயை போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி, நீரை வடித்துவிட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிரியாணி இலை, சீரகம், கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.

பிறகு அதில் வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி, பின் அத்துடன் பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

அடுத்து அதில் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் மல்லி தூள் சேர்த்து 2 நிமிடம் கிளறி, பின் அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, வேக வைத்துள்ள பலாக்காயை போட்டு, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

இறுதியில் கரம் மசாலா சேர்த்து ஒரு கொதி விட்டு இறக்கினால், சுவையான பலாக்காய் கிரேவி ரெடி!!!

Story first published: Friday, May 2, 2014, 12:07 [IST]
Desktop Bottom Promotion