For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கேரளா ஸ்டைல்: இடியாப்பம்

By Maha
|

தற்போதைய காலத்தில் அனைத்து பொருட்களும் கடைகளில் எளிதில் கிடைக்கிறது. அந்த வகையில் எளிதில் கிடைக்கக்கூடிய ஒரு பொருள் தான் இடியாப்ப மாவு. பெரும்பாலானோருக்கு இடியாப்பம் என்றால் மிகவும் பிடிக்கும். இந்த இடியாப்பமானது பலவாறு சமைக்கப்படும். இப்போது அவற்றில் கேரளா ஸ்டைல் இடியாப்பத்தை எப்படி செய்வதென்று பார்க்கப் போகிறோம்.

கேரளா ஸ்டைல் என்றதும், எங்கு கஷ்டமாக இருக்குமோ என்று நினைக்க வேண்டாம். இது மிகவும் எளிமையானது மற்றும் பேச்சுலர்கள் கூட செய்யக்கூடியவாறு இருக்கும். சரி, இப்போது அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Idiyappam : Kerala's Famous Recipe

தேவையான பொருட்கள்:

இடியாப்ப மாவு - 1 கப்
தேங்காய் - 1 கப் (துருவியது)
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
நெய்/எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து இறக்கி, பின் அதனை ஓரளவு குளிர வைத்துக் கொள்ளவும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் இடியாப்ப மாவை போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து நன்கு மென்மையாக பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு இடியாப்ப அச்சில் நெய்/எண்ணெயை தடவி, பின் சிறிது பிசைந்து வைத்துள்ள மாவை வைத்து, இட்லி தட்டில் பிழிய வேண்டும்.

அடுத்து இட்லி பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் ஓரளவு தண்ணீர் ஊற்றி, அதன் மேல் பிழிந்து வைத்துள்ள இட்லி தட்டை வைத்து, துருவிய தேங்காயை தூவி, இட்லி பாத்திரத்தை 10-12 நிமிடம் மூடி வைத்து வேக வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான கேரளா ஸ்டைல் இடியாப்பம் ரெடி!!! இதனை சர்க்கரை மற்றும் தேங்காய் பாலுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

குறிப்பு:

ஒருவேளை இடியாப்ப மாவு கிடைக்காவிட்டால், இந்த முறையை பச்சரிசி மாவு கொண்டு செய்யலாம்.

Story first published: Thursday, August 1, 2013, 18:55 [IST]
Desktop Bottom Promotion