For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ருசியான மைக்ரோவேவ் பாஸ்தா!!!

By Super
|

கேஸ் அடுப்பை பற்ற வைத்து, அதில் தண்ணீர் விட்டு கொதித்தவுடன், பாஸ்தாக்களை அதில் போட்டு வெந்து விட்டதா என்று பார்க்க கடுப்பாக இருக்கிறதா? அல்லது சமையலுக்கு புதிதானவரா? கவலையை விடுங்க. சில நிமிடங்களில் ருசியுள்ள, சத்தான பாஸ்தா வகையை செய்து அசத்தலாம். உங்களிடம் மைக்ரோவேவ் ஓவன் இருந்தால் பலவகையான சமையலை சில நிமிடங்களில் செய்து விடலாம்.

குறுகிய நேரத்துக்குள் செய்யப்படும் சமையலில் பாஸ்தாவும் ஒன்று. இதை செய்வதற்கு பலர் தயங்குவதற்கு காரணம் நேரம் பிடிக்கும் என்பதால் தான். ஆனால் மைக்ரோவேவ்வில் சமைக்கும் போது சீக்கிரத்தில் சமைக்க முடியும். இதனால் நேரம் மிச்சமாகும். இனி சுவையான மைக்ரோவேவ் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்ப்போம்.

How to Microwave Pasta

1. மைக்ரோவேவ்வின் கிண்ணத்தில் பாதி கிண்ணம் நிறையும் வரை பாஸ்தாவை போடவும். மைக்ரோவேவ் கிண்ணம் என்பது கண்ணாடி அல்லது மண்ணில் செய்ததாக இருக்க வேண்டும். பிளாஸ்டிக்கை உபயோகப்படுத்தக் கூடாது.

2. பின்னர் பாஸ்தா மூழ்குமளவு தண்ணீர் சேர்க்க வேண்டும். அதனுடன் சிறிது உப்பு சேர்க்க வேண்டும். உப்பு சேர்த்தால் பாஸ்தா உப்பை உறிஞ்சிக் கொண்டு சுவையை மேலும் கூட்டும். மேலும் உப்பு போட்டு செய்வதால் பாஸ்தாக்கள் சீக்கிரமாக வெந்துவிடும்.

3. தண்ணீரில் உப்பு போட்டது போக, சிறிது எண்ணெய் சேர்க்கலாம். உப்புக்கு பதிலாக சிறிது வினீகரையும் சேர்க்கலாம்.

4. பின்னர் அந்த கிண்ணத்தை ஒரு தட்டில் வைத்து மைக்ரோவேவ் ஓவனுக்குள் வைக்கவும். வேகும்போது தண்ணீர் தட்டில் பொங்கி விழாதபடி தேவையான அளவு தண்ணீரையே பாஸ்தா வேக வைக்க ஊற்ற வேண்டும்.

5. பாஸ்தா வேக வைக்க கூறப்பட்டுள்ள நேரப் படி வேக வைக்கவும். 3 அல்லது 4 நிமிடங்கள் அதிகமாக வேக வைக்கலாம். மைக்ரோவேவ்வின் தன்மையைப் பொறுத்து, நேரத்தை கூட்டியும் குறைத்தும் வைக்கலாம்.

6. பாஸ்தா வெந்ததா என்று ஒன்றிரண்டை எடுத்து சரிபார்க்கவும். வேகவில்லையெனில், இன்னும் சில நிமிடங்கள் வைத்து எடுக்கலாம்.

7. நன்கு வெந்ததும் மைக்ரோவேவ் ஓவனிலிருந்து எடுத்து அதிலிருக்கும் தண்ணீரை வடிகட்டி வெளியேற்றவும். இதற்கு சல்லடைகளை பயன்படுத்தலாம். இதனால் அவை நீரை முற்றிலுமாக வெளியேற்றி விடும்.

8. பின்னர் பாஸ்தா ஒன்றோடு ஒன்று ஒட்டாமலிருக்க சிறிது எண்ணெய் கலந்து வைக்கவும்.

9. 35 நிமிடங்கள் சாஸை மைக்ரோவேவ் ஓவனில் சூடு படுத்தவும். இதற்கு மாற்றாக ஆலிவ் எண்ணெய் சேர்க்கலாம்.

10. பின்பு சாஸுடன் பாஸ்தாவை கலக்கவும். இப்பொழுது சுவையான பாஸ்தா ரெடி.

குறிப்புகள்:

பாஸ்தாக்கள் மேலும் சுவையாக இருக்க, அதனுடன் காய்கறிகள் அல்லது இறைச்சி வகைகளை சேர்க்கலாம். பதப்படுத்தப்பட்ட இறைச்சி அல்லது காய்கறிகளை மைக்ரோவேவ்விலிருந்து சிறிது முன்னரே எடுத்து விடவும். ஏற்கனவே வேக வைத்த காய்கறி அல்லது இறைச்சி வகைகளை மறுபடியும் சூடு படுத்த நினைத்தால் சாஸுடன் சேர்த்து வேகவிடலாம். மைக்ரோவேவ்விலிருந்து எடுத்த பின்பு பாஸ்தாக்கள் மீது குளிர்ந்த நீரை ஊற்றலாம்.

English summary

How to Microwave Pasta | ருசியான மைக்ரோவேவ் பாஸ்தா!!!

Maybe you're a college student without a stove. Maybe you're less likely to set things on fire if you just use the microwave. Regardless of your reason, read on to learn how to make pasta in the microwave. It's simple to make and provides a quick, tasty meal.
Desktop Bottom Promotion