For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கொள்ளு பொரியல்

By Maha
|

தென்னிந்தியாவில் பயறு வகைகளை மக்கள் அதிகம் சாப்பிடுவார்கள். ஏனெனில் அந்த பயறுகளில் சத்துக்கள் அதிகம் நிறைந்துள்ளன. அதிலும் கொள்ளுவில் அதிகப்படியான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதனை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடுவது மிகவும் இன்றியமையாதது. ஏனென்றால், இதில் இன்சுலின் சுரப்பிற்கு தடையை ஏற்படுத்தும் பொருளை அழிக்கும் தன்மை அதிகம் உள்ளது. மேலும் கொள்ளுவை சமைப்பது என்பது மிகவும் எளிது.

அதிலும் முளைக்கட்டிய கொள்ளுவில் எண்ணிலடங்கா சத்துக்கள் உள்ளன. இப்போது அந்த முளைக்கட்டிய கொள்ளு கொண்டு அருமையான முறையில் எப்படி பொரியல் செய்வது என்று பார்ப்போம்.

Horse Gram With Coconut Poriyal

தேவையான பொருட்கள்:

கொள்ளு - 2 கப்
தேங்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
துருவிய தேங்காய் - 2 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
மல்லி தூள் - 2 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
புளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் கொள்ளுவை இரவில் படுக்கும் போது நீரில் நன்கு ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் காலையில் அதனை ஒரு ஈரமான காட்டன் துணியில் போட்டு சுற்றி, 1-2 நாட்கள் வைத்துக் கொள்ள வேண்டும். இதனால் முளைக்கட்டிய கொள்ளு கிடைக்கும்.

பின்பு மிக்ஸியில் தேங்காய், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் புளி சாறு ஊற்றி, சற்று கெட்டியான பேஸ்ட் போல் செய்து கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு சேர்த்து தாளித்து, வெங்காயம் போட்டு பொன்னிறமாக வதக்கி கொள்ள வேண்டும்.

அடுத்து முளைக்கட்டிய கொள்ளுவைப் போட்டு, 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்க வேண்டும்.

பின் அரைத்து வைத்துள்ள மசாலாவைப் போட்டு, உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி, 5-6 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும், குக்கரை திறக்க வேண்டும்.

இறுதியில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் துருவி வைத்துள்ள தேங்காய் சேர்த்து வதக்கி, குக்கரில் உள்ள கொள்ளுவை சேர்த்து, 5 நிமிடம் தண்ணீர் வற்றும் வரை நன்கு வதக்கி இறக்க வேண்டும்.

இப்போது சூப்பரான கொள்ளு பொரியல் ரெடி!!!

English summary

Horse Gram With Coconut Poriyal

Horse gram is also very easy to digest. Moreover, diabetics must have horse gram as it has anti-hyperglycemic properties which reduces insulin resistance. There are many horse gram recipes that you can try. Here is the basic horse gram dry poriyal that is prepared with coconut. Check out the recipe.
Story first published: Tuesday, August 13, 2013, 13:20 [IST]
Desktop Bottom Promotion