For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முளைக்கட்டிய பயிர் புலாவ் (வீடியோ)

By Maha
|

தற்போதைய காலத்தில் அனைவருக்கும் ஆரோக்கியத்தின் மீது அக்கறை வந்துவிட்டது. எப்போதும் நல்ல ஆரோக்கியமான உணவுகளையே சாப்பிட வேண்டுமென்ற எண்ணம் பலரது மனதில் உள்ளது. அதனால் அக்கால உணவுகளை தேடி கண்டுபிடித்து சமைத்து சாப்பிடுகிறார்கள். அந்த வகையில் கைக்குத்தல் அரிசியானது மிகவும் ஆரோக்கியமான உணவுப் பொருள்.

இந்த உணவுப் பொருளுக்கு உடல் எடையை குறைக்கும் சக்தி உள்ளது. இத்தகைய உணவுப் பொருளுடன் முளைக்கட்டிய பயிர்களை சேர்த்து ஒரு புலாவ் செய்து காலையில் சாப்பிட்டால், நாள் முழுவதும் உடல் சுறுசுறுப்புடன் செயல்படும். இங்கு உங்களுக்காக அந்த முளைக்கட்டிய பயிர் புலாவ் ரெசிபியின் செய்முறை மற்றும் வீடியோ கொடுக்கப்பட்டுள்ளது.

Healthy Sprouts Pulao Recipe With Video

தேவையான பொருட்கள்:

கைக்குத்தல் அரிசி - 2 கப் (வேக வைத்தது)
முளைக்கட்டிய பயிர்கள் - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பூண்டு - 3-4 பற்கள் (நறுக்கியது)
இஞ்சி - 1 டீஸ்பூன் (நறுக்கியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
குடைமிளகாய் - 1 (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
பாவ் பாஜி மசாலா - 2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/2 கப்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, பின் அதில் பூண்டு, இஞ்சி, மஞ்சள் தூள், மிளகாய் தூள் மற்றும் தக்காளி சேர்த்து நன்கு 3-4 நிமிடம் வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் சிறிது தண்ணீர் ஊற்றி, தக்காளியை நன்கு மென்மையாக வேக வைக்க வேண்டும்.

அடுத்து குடைமிளகாய் சேர்த்து மீண்டும் சிறிது தண்ணீர் சேர்த்து, 2-3 நிமிடம் குடைமிளகாயை வேக வைக்க வேண்டும்.

பின் அதில் பாவ் பாஜி மசாலா, உப்பு மற்றும் முளைக்கட்டிய பயிர்களை சேர்த்து கிளறி விட வேண்டும்.

இறுதியில் கைக்குத்தல் அரிசி சாதத்தைப் போட்டு நன்கு மசாலா சாதத்துடன் சேரும் வரை கிளறி இறக்கினால், முளைக்கட்டிய பயிர் புலாவ் ரெடி!!!

<center><img style="-webkit-user-select:none;border:0px;" border="0" width="100%" height="1" src="http://web.ventunotech.com/beacon/vtpixpc.gif?pid=2&pixelfrom=jp" /> <div id="vnVideoPlayerContent"></div> <script> var vtn_player_type="vp"; var ven_video_key="MTA0ODg4fHwyfHwxfHwxLDIsMQ=="; var ven_width="100%"; var ven_height="325"; </script> <script type="text/javascript" src="http://web.ventunotech.com/plugins/cntplayer/ventunoSmartPlayer.js"></script></center>

English summary

Healthy Sprouts Pulao Recipe With Video

Take a look at the healthy recipe for sprouts pulao and learn to make this healthy recipe by watching the video given here. &#13;
Desktop Bottom Promotion