For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா

By Maha
|

அனைவருக்குமே சப்பாத்தி மற்றும் பூரிக்கு சட்னி, உருளைக்கிழங்கு மசாலா செய்து சாப்பிட்டு போர் அடித்திருக்கும். ஆகவே தமிழ் போல்ட் ஸ்கை ஒரு அருமையான ரெசிபியைப் பரிந்துரைக்கிறது. அதை முயற்சி செய்து சாப்பிட்டு பாருங்கள். அந்த ரெசிபிக்கு பெயர் ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா. மேலும் இந்த ரெசிபியானது பேச்சுலர்கள் செய்வதற்கு ஏற்ற ஒரு ரெசிபி.

இப்போது அந்த ஹரியாலி கொண்டைக்கடலை மசாலாவை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Hariyali Chole Masala Recipe

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 250 கிராம்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
புதினா - 1 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
பூண்டு - 8 பற்கள்
பச்சை மிளகாய் - 4
வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 2 கப்

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலையை நீரில் குறைந்தது 6 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை நன்கு கழுவி, குக்கரில் போட்டு, தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து, அடுப்பில் வைத்து 4-5 விசில் விட்டு இறக்க வேண்டும்.

குக்கரில் உள்ள விசிலானது போனதும், அதனை திறந்து, நீரை வடித்துவிட்டு தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மிக்ஸியில் புதினா, கொத்தமல்லி, பூண்டு, தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, வேண்டுமானால் தண்ணீர் சிறிது ஊற்றி கெட்டியாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து வதக்கி, அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கிளறி, 4-5 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்னர் மஞ்சள் தூள், மல்லி தூள், சீரகப் பொடி, கரம் மசாலா மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து, 4-5 நிமிடம் கிளறி விட வேண்டும்.

இறுதியில் வேக வைத்துள்ள கொண்டைக்கடலையை சேர்த்து கிளறி, வேண்டுமானால், சிறிது தண்ணீர் ஊற்றி, நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், சுவையான ஹரியாலி கொண்டைக்கடலை மசாலா ரெடி!!!

English summary

Hariyali Chole Masala Recipe

Hariyali chole masala is a sumptuous chickpeas curry which is made with mint and coriander leaves. The gravy is prepared with ground coriander and mint leaves along with a blend of distinct Indian spices. Take a look at the recipe of Hariyali chole masala and do give it a try.
Story first published: Friday, November 29, 2013, 17:54 [IST]
Desktop Bottom Promotion