For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹக்கா நூடுல்ஸ்: சைனீஸ் ரெசிபி

By Maha
|

அனைவருமே காலையில் எழுந்ததும் என்ன சமைப்பது என்றே தெரியாமல் குழப்பத்தில் இருப்போம். அதுமட்டுமல்லாமல் தினமும் ஒரே ரெசிபியை செய்து அழுத்துப் போயிருக்கும். அத்தகையவர்களுக்காக தான ஒரு எளிமையான சைனீஸ் ரெசிபியை கீழே கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியில் சேமியா அல்லது நூடுல்ஸ் என எதை வேண்டுமானாலும் பயன்படுத்தி செய்யலாம். இந்த ரெசிபிக்கு ஹக்கா நூடுல்ஸ்/சேமியா என்று பெயர்.

சரி, அந்த ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Hakka Rice Noodles: Chinese Recipe

தேவையான பொருட்கள்:

சேமியா/நூடுல்ஸ் - 1/2 பாக்கெட் (வேக வைத்தது)
கேரட் - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
குடைமிளகாய் - 1/2 கப் (நறுக்கியது)
பூண்டு - 4 பற்கள் (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சில்ல சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டீஸ்பூன்
தண்ணீர் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் சோள மாவை நீரில் கரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை போட்டு தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு கேரட், குடைமிளகாய், பூண்டு மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து, 4-5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பிறகு உப்பு, சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ் சேர்த்து, 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

அடுத்து கரைத்து வைத்துள்ள சோள மாவை ஊற்றி, 1/2 கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது சுண்டியதும், அதில் வேக வைத்துள்ள நூடுல்ஸ்/சேமியாவை போட்டு 2-3 நிமிடம் கிளறி இறக்கினால், சுவையான ஹக்கா நூடுல்ஸ் ரெடி!!!

English summary

Hakka Rice Noodles: Chinese Recipe

The hakka rice noodles is one of the easy to prepare delicious Chinese recipes. All you need is the right ingredients. Check out the Hakka rice noodles recipe.
Desktop Bottom Promotion