For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பட்டாணி கச்சோரி

By Maha
|

வட இந்தியாவில் கச்சோரி மிகவும் பிரபலமான ஒரு ஸ்நாக்ஸ். அத்தகைய கச்சோரியில் நிறைய உள்ளன. அவற்றில் வைட்டமின்கள் அதிகம் நிறைந்த பச்சை பட்டாணியை முக்கியப் பொருளாகக் கொண்டும் ஒரு கச்சோரி உள்ளது.

அந்த பச்சை பட்டாணி கச்சோரி மாலை வேளையில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு சிறந்த ஸ்நாக்ஸ். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

மைதா - 1 கப்
கடலை மாவு - 1 டேபிள் ஸ்பூன்
ரவை - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

Green Peas Kachori Recipe

உள்ளே வைப்பதற்கு...

பச்சை பட்டாணி - 2 1/2 கப் (வேக வைத்து மசித்தது)
சீரகம் - 3/4 டீஸ்பூன்
ஓமம் - 3/4 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 3/4 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் பேஸ்ட் - 1/2 டீஸ்பூன்
சர்க்கரை - 2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாத்திரத்தில் மைதா, கடலை மாவு, ரவை மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சிறிது எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், ஓமம், பெருங்காய தூள் சேர்த்து தாளித்து, மிளகாய் மற்றும் இஞ்சி பேஸ்ட் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின்பு சர்க்கரை, உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, மசித்து வைத்துள்ள பட்டாணியை சேர்த்து நன்கு கிளறி, இறக்கி தனியாக வைக்க வேண்டும்.

பின் பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக்கி, அதனை சப்பாத்தி போல் தேய்த்து, நடுவே பட்டாணி கலவையை வைத்து மடித்து, தனியாக தட்டில் வைக்க வேண்டும். இதேப் போல் அனைத்து மாவையும் செய்ய வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தீயை குறைவில் வைத்து, அந்த கச்சோரிகளை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பச்சை பட்டாணி கச்சோரி ரெடி!!! இதனை விருப்பான சட்னியுடன் சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

English summary

Green Peas Kachori Recipe | பச்சை பட்டாணி கச்சோரி

Green Peas Kachori is one of the many kachori recipes that are so popular in India. The main ingredient is green peas. Here is the recipe, check out...
Story first published: Tuesday, May 7, 2013, 17:33 [IST]
Desktop Bottom Promotion