For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பட்டாணி சட்னி

By Maha
|

வீட்டில் பச்சை பட்டாணி உள்ளதா? உங்கள் குழந்தை பச்சை பட்டாணி சாப்பிட மறுக்கிறார்களா? அப்படியானால் குழந்தைகளுக்கு தோசை சுடும் போது, அவர்களுக்கு பச்சை பட்டாணியைக் கொண்டு சட்னி செய்து கொடுங்கள். இந்த சட்னியானது சுவையானது மட்டுமின்றி, ஆரோக்கியமானதும் கூட.

இங்கு அந்த பச்சை பட்டாணி சட்னியின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை காலை வேளையில் தோசைக்கு செய்து சாப்பிடுங்கள். அந்த அளவில் இது செய்வதற்கு மிகவும் ஈஸியானது. சரி, இப்போது அந்த ரெசிபியைப் பார்ப்போமா!!!

Green Peas Chutney

தேவையான பொருட்கள்:

பச்சை பட்டாணி - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்ச மிளகாய் - 2 (நறுக்கியது)
துருவிய இஞ்சி - 1 டேபிள் ஸ்பூன்
நறுக்கிய பூண்டு - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பச்சை பட்டாணியை கழுவி நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னிறமாக வதக்கி விட வேண்டும்.

பின்பு அதில் பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி சேர்த்து மிதமான தீயில் 3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து அதில் பச்சை பட்டாணியை சேர்த்து, உப்பு தூவி நன்கு கிளறி விட்டு, பின் துருவிய தேங்காயை சேர்த்து தட்டு கொண்டு மூடி சிறிது நேரம் பட்டாணியை வேக வைக்கவும்.

பின்னர் அதனை இறக்கி, குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு, லேசாக தண்ணீர் ஊற்றி அரைத்தால், பச்சை பட்டாணி சட்னி ரெடி!!!

English summary

Green Peas Chutney

Green peas chutney is one of the best recipes you can opt for to eat with that yummy dosa. Try this chutney recipe this morning. 
Story first published: Wednesday, July 9, 2014, 17:44 [IST]
Desktop Bottom Promotion