For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்

By Maha
|

எப்போதும் சாம்பார், புளிக்குழம்பு என்று சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியெனில் சற்று வித்தியாசமாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்குமாறான பச்சை பயறு மற்றும் உருளைக்கிழங்கை கடைந்து சாதத்துடன் சேர்த்து, நெய் ஊற்றி சாப்பிட்டு பாருங்கள். இதன் சுவையே அருமையாக இருக்கும்.

இங்கு அந்த பச்சை பயறு உருளைக்கிழங்கு ரெசிபியை எப்படி செய்வதென்று தெளிவாக கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பார்ப்போமா!!!

பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல்

தேவையான பொருட்கள்:

பச்சை பயறு - 1 கப் (வேக வைத்தது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்தது)
தக்காளி - 3 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 5 (நீளமாக கீறியது)
இஞ்சி - 1 துண்டு (துருவியது)
கறிவேப்பிலை - சிறிது
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - 1 கப்

தாளிப்பதற்கு...

கடுகு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எண்ணெய் - 1/2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை ஒவ்வொன்றாக சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் அதில் தக்காளி, பச்சை மிளகாய், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கி விட வேண்டும்.

பிறகு அதில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் பச்சை பயறை லேசாக கடைந்து, பின் அதனை வாணலியில் ஊற்றி, தேவையான அளவு உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து கிளறி, 10 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், பச்சை பயறு உருளைக்கிழங்கு கடைசல் ரெடி!!!

English summary

Easy Moong Dal & Potato Recipe

Tamil Boldsky shares with you a simple and easy dal recipe you can prepare in about 20 minutes. This delectable dal curry is cooked along with potato which is another highly nutritious veggie. So, what are you waiting for? Take a look at this scrumptious recipe.
Story first published: Tuesday, April 7, 2015, 13:12 [IST]
Desktop Bottom Promotion