For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஈஸியான... தால் மக்கானி ரெசிபி

By Maha
|

வட இந்திய ரெசிபிக்களின் மிகவும் சுவையான ஒன்று தான் தால் மக்கானி. இந்த ரெசிபி மிகவும் ஆரோக்கியமானதும் கூட. ஏனெனில் இதில் உடலுக்கு வலிமையைத் தரும் உளுத்தம் பருப்பு மற்றும் காராமணி சேர்த்து செய்யப்படும். மேலும் இந்த தால் மக்கானியானது சப்பாத்தி, சாதம் போன்றவற்றிற்கு அட்டகாசமாக இருக்கும்.

இங்கு அந்த தால் மக்கானியின் எளிமையான செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து அவற்றை செய்து சுவைத்து மகிழுங்கள்.

Easy Dhaba Style Dal Makhani Recipe

தேவையான பொருட்கள்:

உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காராமணி - 1/4 கப்
இஞ்சி - 1 இன்ச் (தட்டியது)
பூண்டு - 6-7 பற்கள்
பச்சை மிளகாய் - 2-3
தக்காளி - 4
சீரகம் - 1 டீஸ்பூன்
வெந்தயம் - 1/2 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா- 1/2 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
க்ரீம் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் காராமணி மற்றும் உளுத்தம் பருப்பை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்து கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை குக்கரில் போட்டு, உப்பு, இஞ்சி மற்றும் 3 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, 4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு மிக்ஸியில் தக்காளி, பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து உருகியதும், சீரகம், வெந்தயம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் அரைத்து வைத்துள்ள தக்காளி கலவையை சேர்த்து 3-4 நிமிடம் மிதமான தீயில் கிளறி விட வேண்டும்.

அடுத்து அதில் மஞ்சள் தூள், மல்லி தூள், மிளகாய் தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் அதில் வேக வைத்துள்ள பருப்பு மற்றும் காராமணியை சேர்த்து 4-5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கி, க்ரீம் சேர்த்தால், தால் மக்கானி ரெடி!!!

English summary

Easy Dhaba Style Dal Makhani Recipe

Dal makhani is one dal recipe which is enjoyed by almost each of us at any and every occasion. Take a look at this easy dal recipe and learn to prepare the exotic dhaba style dal makhani at your home.
Story first published: Saturday, August 23, 2014, 13:49 [IST]
Desktop Bottom Promotion