For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பஞ்சாபி ரெசிபி: தம் ஆலு அம்ரித்சரி

By Maha
|

இந்தியாவில் தம் ஆலு/உருளைக்கிழங்கு மிகவும் பிரபலமானது. இந்த தம் ஆலுவை பலவாறு இந்தியாவில் சமைப்பார்கள். அந்த வகையில் பஞ்சாபில் உள்ள அம்ரித்சரி என்னும் இடத்தில், இந்த தம் ஆலு குழம்பை வித்தியாசமாக சமைப்பார்கள்.

இப்போது அந்த பஞ்சாபி ரெசிபியான தம் ஆலு அம்ரித்சரி குழம்பை எப்படி செய்வதென்று கொடுத்துள்ளோம். அதைப் படித்து வீட்டில் ட்ரை செய்து பாருங்கள்.

Dum Aloo Amritsari: Spicy Punjabi Recipe

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 1/2 கிலோ
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
வெங்காயம் - 2 (நறுக்கியது)
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 3 (நறுக்கியது)
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை கழுவி, தோலுரித்து, நறுக்கி கொள்ள வேண்டும்.

பின்னர் அதனை உப்பு தண்ணீரில் 15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி, உருளைக்கிழங்கை போட்டு பொன்னிறமாக வறுத்து, அதனை ஒரு தட்டில் வைத்துக் கொள்ளவும்.

பிறகு மற்றொரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் கடுகு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கி, இஞ்சி பேஸ்ட் சேர்த்து, 2-3 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து நறுக்கிய தக்காளி, உப்பு, சீரகப் பொடி, மல்லித் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள் சேர்த்து, 5 நிமிடம் நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, நன்கு கொதிக்க விட்டு, வறுத்து வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, தீயை குறைவில் வைத்து, 5 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு, கரம் மசாலா சேர்த்து கிளறி இறக்க வேண்டும்.

இப்போது சுவையான பஞ்சாபி ரெசிபியான தம் ஆலு அம்ரித்சரி ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி சாதம் அல்லது பூரியுடன் சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

English summary

Dum Aloo Amritsari: Spicy Punjabi Recipe

Dum aloo is a popular recipe in India. This delightful aloo recipe has a number of versions in terms of the preparation technique and the spices used.This recipe is the authentic Punjabi version of this mouthwatering recipe. So, try out this tangy and delicious vegetarian recipe of dum aloo amritsari and enjoy a sumptuous meal.
Story first published: Saturday, June 8, 2013, 12:05 [IST]
Desktop Bottom Promotion