For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மிளகாய் சட்னி

By Maha
|

இட்லி, தோசை போன்றவற்றிற்கு சட்னி ஒரு சூப்பரான சைடு டிஷ். அதில் பெரும்பாலானோர் செய்வது தேங்காய் சட்னி தான். ஆனால் அந்த தேங்காய் சட்னியுடன், மிளகாய் சட்னியையும் சேர்த்து சாப்பிட்டால், அதன் சுவையே தனி தான். இந்த மிளகாய் சட்னியை பலவாறு சமைப்பார்கள்.

இப்போது அதில் ஒரு முறையைக் கொடுத்துள்ளோம். அதைப் படித்து முயற்சி செய்து பாருங்கள். குறிப்பாக இந்த சட்னி பேச்சுலர்கள் சமைப்பதற்கு சரியாக இருக்கும். சரி, அந்த மிளகாய் சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Dry Chilli Chutney

தேவையான பொருட்கள்:

வரமிளகாய் - 4
வெங்காயம்- 1
தக்காளி - 1
பூண்டு - 2 பற்கள்
புளி - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
கடுகு - 1/4 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

வெங்காயம், தக்காளி, 3 வரமிளகாய், பூண்டு, கொத்தல்லி மற்றும் புளி ஆகியவற்றை மிக்ஸியில் போட்டு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் மற்றும் 1 வரமிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்பு அதில் அரைத்து வைத்துள்ளதைப் போட்டு, 1 கப் தண்ணீர் ஊற்றி, 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும். இப்போது சூப்பரான மிளகாய் சட்னி ரெடி!!! இதனை இட்லி மற்றும் தோசையுடன் சாப்பிட்டால் அருமையாக இருக்கும்.

குறிப்பு:

இந்த சட்னியில் அனைத்து பொருட்களையும் அரைத்தப் பின்னர், அதனை தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுவதற்கு பதிலாக, அரைத்த கலவையில் கடுகு, உளுத்தம் பருப்பை தாளித்து ஊற்றி, அப்படியே இட்லி அல்லது தோசையுடன் சாப்பிடலாம்.

English summary

Dry Chilli Chutney

Dry Chilli Chutney/Vara Milagai Chutney is very spicy side dish for idli and dosa. It is one of the easiest chutney recipe. Check out and try it...
Story first published: Monday, September 23, 2013, 19:38 [IST]
Desktop Bottom Promotion