For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஆலு மட்டர் வறுவல்

By Maha
|

நவம்பர் மாதம் பச்சை பட்டாணி சீசன் என்பதால், பச்சை பட்டாணியானது விலை மலிவாக கிடைக்கும். ஆகவே அந்த பச்சை பட்டாணியை இந்த மாதம் பலவாறு சமைத்து சாப்பிடுங்கள். அதிலும் அதனை உருளைக்கிழங்குடன் சேர்த்து வறுவல் போன்று செய்து, சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால், அதன் அருமையே அருமை தான்.

இப்போது ஆலு மட்டர் என்னும் உருளைக்கிழங்கு பட்டாணி வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Dry Aloo Matar Recipe

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 3-4
வெங்காயம் - 2 (நறுக்கியது)
பச்சை பட்டாணி - 1/2 கப்
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்ழுன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டீஸ்பூன்

செய்முறை:

முதலில் உருளைக்கிழங்கை நன்கு கழுவி இரண்டாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் குக்கரில் அதனைப் போட்டு, தண்ணீர் ஊற்றி 2-3 விசில் விட்டு வேக வைத்து இறக்க வேண்டும்.

குக்கரில் உள்ள விசிலானது போனதும், குக்கரை திறந்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்து குளிர வைத்து, அதன் தோலை உரித்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகத்தைப் போட்டு தாளிக்க வேண்டும்.

பின்பு பச்சை மிளகாய் சேர்த்து கிளறி, வெங்காயத்தை சேர்த்து 3-4 நிமிடம் பொன்னிறமாக வதக்கி, பின் பச்சை பட்டாணி, மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

பிறகு மிளகாய் தூள் தூவி கிளறி விட்டு, உருளைக்கிழங்கை ஒன்றிரண்டாக பிசைந்து சேர்த்து, கலவை அனைத்தும் ஒன்று சேரும் வரை பிரட்டி இறக்கினால், சுவையான ஆலு மட்டர் ரெடி!!!

English summary

Dry Aloo Matar Recipe

If you want to try quick side dish recipes, here is a simple dry aloo matar recipe to prepare using the seasonal vegetable, green peas. Check out...
Story first published: Wednesday, November 13, 2013, 11:39 [IST]
Desktop Bottom Promotion