For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தபா ஸ்டைல்: தால் ரெசிபி

By Maha
|

பொதுவாக தால் (பருப்பு) ரெசிபியானது பலவாறு சமைக்கப்படும். மேலும் தால் ரெசிபியில் தபா ஸ்டைல் தால் ரெசிபி மிகவும் சுவையாக இருக்கும். ஏனெனில் தபா ஸ்டைல் தால் ரெசிபியில் மூன்று வகையான பருப்புக்கள் கொண்டு செய்வார்கள். அவை கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் காராமணி போன்றவை. இவ்வாறு பருப்புக்களை கொண்டு செய்வதால், இந்த ரெசிபியானது உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது.

இப்போது அந்த தபா ஸ்டைல் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Dhaba Style: Dal Recipe

தேவையான பொருட்கள்:

கொண்டைக்கடலை - 1/2 கப்
உளுத்தம் பருப்பு - 1/2 கப்
காராமணி - 1/2 கப்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
உலர்ந்த வெந்தய இலை - 2 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் கொண்டைக்கடலை, உளுத்தம் பருப்பு மற்றும் காராமணியை நீரில் 3-4 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதனைக் கழுவி விட்டு, குக்கரை அடுப்பில் வைத்து, அதில் போட்டு, தண்ணீர் ஊற்றி, 3-4 விசில் விட்டு இறக்கி, குளிர வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 2-3 நிமிடம் வதக்கி, வெங்காயத்தைப் போட்டு, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பிறகு சீரகப் பொடி, மல்லி தூள், மிளகாய் தூள், மஞ்சள் தூள் சேர்த்து 2 நிமிடம் வதக்க வேண்டும்.

பின் தக்காளியைப் போட்டு 3 நிமிடம் நன்கு வதக்கி, வேக வைத்துள்ள பருப்புக்களை அப்படியே தண்ணீருடன் ஊற்றி, உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து, தட்டு கொண்டு மூடி 5-6 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின்பு தட்டை எடுத்துவிட்டு, அதில் உலர்ந்த வெந்தய இலையை கையால் நசுக்கி தூவி, அடுப்பை அணைத்து விட்டு, பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் அதன் மேல் தேங்காய் எண்ணெய் ஊற்றி பரிமாறினால், சூப்பரான தபா ஸ்டைல் தால் ரெசிபி ரெடி!!! இது சாதத்துடன் சாப்பிட ஏற்றது.

English summary

Dhaba Style: Dal Recipe

Dal can be prepared in a million ways, but dhaba style dal is definitely special. With just a few spices and three different kinds of legumes make this dal recipe burst with some delicious flavours. It is one of the perfect vegan recipes to try. It's creamy texture and buttery taste make your taste-buds thank you for this awesome treat. So, here goes the recipe for dhaba style dal recipe.
Story first published: Wednesday, August 14, 2013, 14:03 [IST]
Desktop Bottom Promotion