For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெஜிடேபிள் தால் ரெசிபி

By Maha
|

பருப்புக்களை உணவில் அதிகம் சேர்த்தால், உடலின் சக்தி அதிகரித்து, உடல் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதுமட்டுமின்றி பெரும்பாலான இந்திய உணவுகள் பருப்புக்களை கொண்டு செய்யப்படுவதால், அனைவருக்குமே நிச்சயம் பருப்பு ரெசிபிக்கள் என்றால் பிடிக்கும். அதிலும் குளிர்காலத்தில் மார்கெட்டிற்கு சென்றால், பல்வேறு காய்கறிகளைப் பார்க்கக்கூடும். அப்படி பார்க்கையில், அவற்றை வாங்கி வந்து, வெஜிடேபிள் தால் செய்து சாப்பிடலாம்.

இந்த ரெசிபியானது மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியத்தையும் கொடுக்கக்கூடியவை. சரி, இப்போது அந்த வெஜிடேபிள் தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Delicious Vegetable Dal Recipe

தேவையான பொருட்கள்:

பாசிப்பருப்பு - 2 கையளவு
துவரம் பருப்பு - 2 கைளயவு
வெங்காயம் - 1 (நறுக்கியது)
கேரட் - 2 (நறுக்கியது)
பீன்ஸ் - 10-20 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 3 (நறுக்கியது)
பூண்டு - 6-7 பற்கள் (தட்டியது)
தக்காளி - 1 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
வரமிளகாய் - 1
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
நெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் இரண்டு பருப்புக்களையும் நீரில் நன்கு கழுவி, பின் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்து, மீண்டும் ஒருமுறை கழுவ வேண்டும்.

பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் கழுவி வைத்துள்ள பருப்புக்களை போட்டு, தண்ணீர் ஊற்றி, உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், பிரியாணி இலை மற்றும் வரமிளகாய் சேர்த்து தாளித்து, வெங்காயத்தைப் போட்டு தீயை குறைவில் வைத்து ஒரு நிமிடம் தாளிக்க வேண்டும்.

பிறகு கேரட், பூண்டு, பச்சை மிளகாய் மற்றும் பீன்ஸ் சேர்த்து, குறைவான தீயிலேயே 3-4 நிமிடம் வதக்கி, பின் சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூளை தூவி கிளற வேண்டும். (உப்பை அதிகம் போட்டுவிட வேண்டாம். ஏனெனில் ஏற்கனவே பருப்பை வேக வைக்கும் போது உப்பு சேர்த்துள்ளோம்.)

பின்னர் தக்காளியைப் போட்டு, 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து குக்கரை திறந்து, அதில் உள்ள பருப்பை மத்து கொண்டு மசித்துக் கொள்ள வேண்டும்.

இந்நேரம் காய்கறிகளானது நன்கு வெந்துவிட்டால், அதில் மிளகாய் தூள், கரம் மசாலா மற்றும் மசித்து வைத்துள்ள பருப்பைப் போட்டு, நன்கு பச்சை வாசனை போக கொதிக்க விட்டு இறக்கி எலுமிச்சை சாறு ஊற்றி கிளறினால், சுவையான வெஜிடேபிள் தால் ரெடி!!! இதனை சாதம் அல்லது சப்பாத்தியுடன் சாப்பிடலாம்.

English summary

Delicious Vegetable Dal Recipe

As the market is filled with seasonal green vegetables, here is a dal recipe using some vegetables. If you are on a diet, you can have this healthy and filling dal.
Story first published: Friday, December 13, 2013, 11:06 [IST]
Desktop Bottom Promotion