Thought for the day
Your page will load in ...
Close Ad X
Advertisement
English हिन्दी ಕನ್ನಡ മലയാളം తెలుగు
 
Share This Story

பன்னீர் பக்கோடா

Posted by:
Published: Saturday, January 12, 2013, 16:59 [IST]

Delicious Paneer Pakora
 

பெரும்பாலும் மாலை வேளையில் சற்று மொறுமொறுப்புடன் இருக்கும் ஸ்நாக்ஸ் தான் சாப்பிடப் பிடிக்கும். அதிலும் பக்கோடா என்றால் சூப்பராக இருக்கும். பக்கோடாவில் நிறைய வகைகள் உள்ளன. இப்போது அதில் பன்னீரை வைத்து எப்படி பக்கோடா செய்வதென்று பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

பன்னீர் - 250 கிராம்
கடலை மாவு - 1 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கடலை மாவை போட்டு, அத்துடன் மிளகாய் தூள், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, பஜ்ஜி மாவு பதத்தில் கரைத்து, 1/2 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் பன்னீரை சதுரத் துண்டுகளாக வெட்டிக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் பன்னீர் துண்டுகளை கடலை மாவு கரைசலில் நனைத்து, எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான பன்னீர் பக்கோடா ரெடி!!! இதனை தக்காளி சாஸ் அல்லது கொத்தமல்லி சட்னியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary
Make Delicious Paneer Pakora using this simple recipe from awesome cuisine.
Subscribe Newsletter