For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அவல் உப்புமா

By Maha
|

காலை வேளையில் 15 நிமிடங்களில் காலை உணவு செய்ய வேண்டுமெனில், அதற்கு அவல் உப்புமா சரியானதாக இருக்கும். ஆம், அவல் உப்புமா செய்வது மிகவும் எளிது மற்றும் ஆரோக்கியமான ஒரு காலை உணவும் கூட.

சொன்னால் நம்பமாட்டீர்கள், இது மிகவும் வித்தியாசமான சுவையில் இருக்கும். நம்பவில்லையெனில், செய்து பார்த்து தெரிந்து கொள்ளுங்கள். சரி, அதனை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Delicious Aval Upma

தேவையான பொருட்கள்:

அவல் - 2 கப்
வெங்காயம் - 1/2 கப் (நறுக்கியது)
தக்காளி - 1/2 கப் (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1/2 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - சிறிது
உப்பு - தேவையான அளவு

தாளிப்பதற்கு...

எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1/2 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
வரமிளகாய் - 1
கறிவேப்பிலை - சிறிது
வேர்க்கடலை - 1/2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 5 (நறுக்கியது)
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் அவலை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடிகட்டி தனியாக ஒரு பொளலில் வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், கடுகு, சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை, வேர்க்கடலை, பச்சை மிளகாய் மற்றும் பெருங்காயத்தூள் சேர்த்து தாளித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு நறுக்கிய வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து, பொன்னிறமாக வதக்கி, மஞ்சள் தூள் சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து, மூடி வைக்க வேண்டும்.

பின்பு நறுக்கிய தக்காளியை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, அவலை சேர்த்து நன்கு கிளறிவிட வேண்டும்.

இறுதியில் உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, 3-5 நிமிடம் பிரட்டி விட்டு, இறக்க வேண்டும்.

இப்போது சுவையான அவல் உப்புமா ரெடி!!! இதன் மேல் கொத்தமல்லியைத் தூவி அலங்கரித்து, தயிருடன் சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.

English summary

Delicious Aval Upma |அவல் உப்புமா

If you want to fix your breakfast with in 15 minutes then here is the recipe for it..Yes, aval/poha upma is very easy and healthy recipe which is neither tangy nor sweet but delicious..Don't believe in my words. Just try it...
Story first published: Thursday, May 9, 2013, 10:18 [IST]
Desktop Bottom Promotion