For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

அசாரி கோபி ரெசிபி

By Neha Mathur
|

காலிஃப்ளவர் கொண்டு ஏதேனும் சாப்பிட ஆசைப்படுகிறீர்களா? எப்போதும் கோபி மஞ்சூரியன் செய்து சாப்பிட்டு போர் அடித்துவிட்டதா? அப்படியானால், சற்று வித்தியாசமாக இங்கு கொடுக்கப்பட்டுள்ள அசாரி கோபி ரெசிபியை முயற்சி செய்து பாருங்கள். இது மிகவும் சுவையாக இருப்பதோடு, குளிர்காலத்தில் சாப்பிடுவதற்கு ஏற்ற ஒரு ரெசிபியாகவும் இருக்கும்.

அதிலும் இந்த ரெசிபியானது பண்டிகை காலங்களில் வீட்டில் இருக்கும் போது செய்து சாப்பிடுவதற்கு ஏற்றது. சரி, இப்போது அந்த அசாரி கோபி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Delicious Achari Gobhi Recipe

தேவையான பொருட்கள்:

காலிஃப்ளவர் - 3 கப்
எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
வெங்காயம் - 1 கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
தக்காளி சாறு - 2 டேபிள் ஸ்பூன்
தயிர் - 2 டேபிள் ஸ்பூன்
அசாரி மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எலுமிச்சை சாறு - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

அசாரி மசாலாவிற்கு...

வரமிளகாய் - 16-18
மல்லி - 1 டேபிள் ஸ்பூன்
வெங்காய விதை/வெங்காய விழுது - 3 டீஸ்பூன்
சோம்பு - 6 டேபிள் ஸ்பூன்
கடுகு - 2 டீஸ்பூன்
சீரகம் - 6 டீஸ்பூன்
உப்பு - 6 டேபிள் ஸ்பூன்
மஞ்சள் தூள் - 3 டேபிள் ஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 3 டீஸ்பூன்

செய்முறை:

அசாரி மசாலா செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வர மிளகாய், மல்லி, வெங்காய விதை, சோம்பு, கடுகு, சீரகம் சேர்த்து பொன்னிறமாக வறுத்து இறக்கி, 5 நிமிடம் குளிர வைக்க வேண்டும்.

பின்னர் அதனை மிக்ஸியில் போட்டு நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

பின் அதனை காற்றுப்புகாத ஒரு பாட்டிலில் போட்டு வைத்துக் கொண்டால், 2 மாதம் வரை பயன்படுத்தலாம்.

அசாரி கோபி செய்முறை:

ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், காலிஃப்ளவரைப் போட்டு பொன்னிறமாக பொரித்து இறக்கி, தனியாக ஒரு தட்டில் போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மீண்டும் அந்த வாணலியை அடுப்பில் வைத்து, அதில் மீதமுள்ள 2 டேபிள் ஸ்பூன் எண்ணெயை ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தைப் போட்டு பொன்னறிமாக வதக்க வேண்டும்.

அடுத்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து சிறிது நேரம் வதக்கி, பின் தக்காளி சாறு மற்றும் தயிர் ஊற்றி சிறிது நேரம் கிளறி விட வேண்டும்.

பின்பு அதில் அசாரி மசாலா, மிளகாய் தூள், உப்பு மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி கிளறி விட வேண்டும்.

பிறகு வறுத்து வைத்துள்ள காலிஃப்ளவரை போட்டு, மூடி வைத்து 2 நிமிடம் வேக வைக்க வேண்டும்.

பின் எலுமிச்சை சாறு மற்றும் மாங்காய் தூள் சேர்த்து கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான அசாரி கோபி ரெடி!!!

English summary

Delicious Achari Gobhi Recipe

Looking for a different Gobhi recipe which tastes good as well? This achari gobhi is a delicious change from the regular gobhi ki sabzi.
Story first published: Monday, January 13, 2014, 18:36 [IST]
Desktop Bottom Promotion