For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தால் புக்காரா

By Maha
|

பெரும்பாலான வீடுகளில் பண்டிகை தினங்களில், ஏதேனும் ஒரு பருப்பை சமைத்து சாப்பிடுவார்கள். ஆனால் எப்போதும் ஒரே மாதிரியான பருப்பு ரெசிபியை மேற்கொள்வதற்கு பதிலாக, வரும் விநாயகர் சதுர்த்திக்கு ஒரு பஞ்சாபி ஸ்டைல் ரெசிபியான தால் புக்காரா ரெசிபியை செய்யலாம். இந்த ரெசிபி பார்ப்பதற்கு அப்படியே தால் மக்கானி போன்று இருக்கும். ஆனால் இதற்கு பயன்படுத்தும் பொருட்கள் வித்தியாசமானதாக இருக்கும்.

சரி, இப்போது விநாயகர் சதுர்த்திக்கு பஞ்சாபி ரெசிபியான தால் புக்காராவை செய்ய ரெடி ஆகிடீங்களா? சரி, அதன் செய்முறை பார்ப்போமா!!!

Dal Bukhara: Ganesh Chaturthi special Recipe

தேவையான பொருட்கள்:

முழு உளுத்தம் பருப்பு - 1 கப்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
நன்கு கனிந்த தக்காளி - 4 (நறுக்கியது)
தக்காளி பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - 2 இன்ச் (தோலுரித்து துருவியது)
பூண்டு - 2-3 பல் (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
பிரியாணி இலை - 1
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
உலர்ந்த வெந்தய இலை - 1 டீஸ்பூன்
நாட்டுச்சர்க்கரை - 1 டேபிள் ஸ்பூன்
வெண்ணெய் - 1-2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் உளுத்தம் பருப்பை நீரில் 6-8 மணிநேரம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும். பின் அதனை 2-3 தடவை நன்கு விட வேண்டும்.

அடுத்து அதனை அப்படியே குக்கரில் போட்டு, 10 நிமிடம் அடுப்பில் வைத்து, 3 கப் தண்ணீர் மற்றும் பிரியாணி இலை சேர்த்து, குக்கரை மூடி 3-4 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின்பு அதனை திறந்து, மத்து கொண்டு நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், சீரகம், பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, வெங்காயம் மற்றும் மிளகாய் சேர்த்து வதக்கி, இஞ்சி மற்றும் பூண்டு சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

பின் நறுக்கி வைத்துள்ள தக்காளியைப் போட்டு, உப்பு சேர்த்து சிறிது நேரம் வதக்க வேண்டும்.

தக்காளியானது நன்கு வதங்கியதும், அதில் 1 கப் தண்ணீர் ஊற்றி, 5-6 நிமிடம் நன்கு கொதிக்க விட வேண்டும்.

அடுத்து தக்காளி பேஸ்ட், மஞ்சள் தூள், நாட்டுச்சர்க்கரை மற்றும் மல்லி தூள் சேர்த்து கிளறி விட வேண்டும்.

பிறகு தட்டு கொண்டு மூடி, தீயை குறைவில் வைத்து, 6-8 நிமிடம் கொதிக்க விட வேண்டும்.

இப்போது கிரேவியானது சற்று கெட்டியாகி இருக்கும். இந்நேரத்தில் மசித்து வைத்துள்ள பருப்பைப் போட்டு, உப்பு சேர்த்து கிளறி, மீண்டும் மூடி மிதமான தீயில் 10 நிமிடம் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.

இறுதியில் அதன் மேல் உலர்ந்த வெந்தய இலையை கையால் நசுக்கி மேலே தூவி விட வேண்டும்.

இப்போது சூப்பரான தால் புக்காரா ரெடி!!! இதனை சாதத்துடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Dal Bukhara: Ganesh Chaturthi special Recipe

The look and feel of this dal recipe is very similar to our very own Dal Makhani. But there is a distinct difference between the Punjabi dish Dal Makhani and the exotic Dal Bukhara. The difference comes from the spices used in these two dal recipes. So try this recipe for ganesh chaturthi and enjoy the day with your family.
Story first published: Thursday, September 5, 2013, 13:19 [IST]
Desktop Bottom Promotion