For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தாஹி புலாவ்

By Maha
|

Dahi Pulao: Delicious Rice Recipe
சமையலிலேயே புலாவ் செய்வதென்பது மிகவும் எளிது. இத்தகைய புலாவ் ரெசிபியில் பல வகைகள் உள்ளன. தாஹி என்றால் தயிர் என்று அர்த்தம். பொதுவாக தயிர் சாதத்தை தான் தாஹி புலாவ் என்று சொல்கிறார்கள். இந்த தாஹி புலாவ்வின் சிறப்பு என்னவென்றால், இதில் தயிருடன், காய்கறிகள், பால் சேர்த்து, வித்தியாசமான முறையில் செய்வது தான். இப்போது அதன் செய்முறையைப் பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

அரிசி - 500 கிராம்
தயிர் - 250 கிராம்
பால் - 1 கப்
வெங்காயம் - 2 (நறுக்கியது)
காய்கறிகள் - 1 கப் ( நறுக்கிய உருளைக்கிழங்கு, பீன்ஸ், கேரட் மற்றும் பச்சை பட்டாணி)
கிராம்பு - 6
பட்டை - 1 இன்ச்
ஏலக்காய் - 2
முந்திரி - 6
உலர் திராட்சை - 3
குங்குமப்பூ - 1/2 டீஸ்பூன்
கேசரிப் பவுடர் - 1 டீஸ்பூன் (சிவப்பு, மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறப் பொடி)
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் காய்கறிகளைப் போட்டு சிறிது தண்ணீர் ஊற்றி, வேக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரி மற்றும் உலர் திராட்சையை போட்டு பொன்னிறமாக வறுத்துக் கொள்ள வேண்டும். அதே சமயம், மற்றொரு அடுப்பில் அரிசியை கழுவிப் போட்டு, பாதியாக வேக வைத்து, நீரை வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு முந்திரி மற்றும் திராட்சையை எடுத்து விட்டு, அதில் வேண்டிய நெய்யை விட்டு, கிராம்பு, கட்டை, ஏலக்காய் போட்டு தாளிக்க வேண்டும்.

பின் வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்கி, வேக வைத்துள்ள காய்கறிகள் மற்றும் உப்பு சேர்த்து தீயை குறைவில் வைத்து, கிளறி ஒரு நிமிடம் வதக்க வேண்டும்.

பிறகு அதில் பாதியாக வேக வைத்துள்ள சாதத்தை போட்டு, தயிரை ஊற்றி ஒர கொதி விட்டு, பின் பாலை சேர்த்து, கேசரிப் பொடி, குங்குமப்பூ போட்டு, குக்கரை மூடி, தீயை குறைவில் வைத்து, அரை மணிநேரம் அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான தாஹி புலாவ் ரெடி!!! இதனை தயிர் பச்சடியுடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Dahi Pulao: Delicious Rice Recipe | தாஹி புலாவ்

This dahi rice recipe is different from the famous curd rice. Curd rice is made with curd, boiled rice, mustard seeds and salt. Dahi rice has more than curd and rice. Lets check out the recipe.
Story first published: Friday, January 18, 2013, 18:36 [IST]
Desktop Bottom Promotion