For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபி

By Babu
|

எப்போதும் சேப்பக்கிழங்கு கொண்டு வறுவல் தான் செய்வோம். ஆனால் இங்கு சேப்பக்கிழங்கை தயிர் சேர்த்து எப்படி சைடு டிஷ் செய்வதென்று கொடுத்துள்ளோம். இந்த ரெசிபியானது வித்தியாசமான சுவையில் இருப்பதுடன், மிகவும் ஆரோக்கியமானதும் கூட. குறிப்பாக உடலில் எனர்ஜி இல்லாதது போல் இருப்பவர்கள், இதனை செய்து சாப்பிட்டால் எனர்ஜியானது கிடைக்கும்.

சரி, இப்போது அந்த தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Dahi Arbi Recipe For Navratri

தேவையான பொருட்கள்:

சேப்பக்கிழங்கு - 250 கிராம்
தயிர் - 3 கப்
ஓமம் - 1 டேபிள் ஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மாங்காய் தூள் - 1 டீஸ்பூன்
கல் உப்பு - தேவையான பொருட்கள்
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் சேப்பக்கிழங்கை நன்கு கழுவிப் போட்டு, தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2 விசில் விட்டு இறக்கி குளிர வைக்க வேண்டும்.

சேப்பக்கிழங்கானது குளிர்ந்ததும், அதன் தோலை நீக்கிவிட்டு, பொடியாக வெட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், ஓமம் சேர்த்து தாளித்து, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மாங்காய் தூள், மல்லி தூள் சேர்த்து 2-3 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் வெட்டி வைத்துள்ள சேப்பக்கிழங்கை சேர்த்து கிளறி, சேப்பக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்கி விட வேண்டும்.

பின் அதில் தண்ணீர் மற்றும் உப்பு சேர்த்து கிளறி, அடுத்து அதில் தயிர் ஊற்றி கிளறி, மிதமான தீயில் 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்கினால், தயிர் சேப்பக்கிழங்கு ரெசிபி ரெடி!!!

English summary

Dahi Arbi Recipe For Navratri

Dahi arbi is a recipe which you can easily make and eat while you are fasting during Navratri. So, check out the steps to prepare dahi arbi and give it a try.
Story first published: Thursday, April 3, 2014, 11:36 [IST]
Desktop Bottom Promotion