For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கறிவேப்பிலை சட்னி

By Maha
|

காலையில் இட்லி அல்லது தோசைக்கு தொட்டுக் கொள்ள என்ன சட்னி செய்வதென்று தெரியவில்லையா? அப்படியானால் கறிவேப்பிலை சட்னியை முயற்சி செய்து பாருங்கள். அதிலும் இங்கு கொடுக்கப்பட்டுள்ள கறிவேப்பிலை சட்னி சற்று வித்தியாசமான சுவையைக் கொண்டது.

சரி, இப்போது அந்த கறிவேப்பிலை சட்னியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Curry Leaves Chutney Recipe

தேவையான பொருட்கள்:

தேங்காய் - 1/2 கப் (துருவியது)
உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
கறிவேப்பிலை - 1/4 கப்
பச்சை மிளகாய் - 5
புளி - சிறு துண்டு
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
கடுகு - 3/4 டீஸ்பூன்
எண்ணெய் - 2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் உளுத்தம் பருப்பு போட்டு பொன்னிறமாக வறுத்து, பின் கறிவேப்பிலை, பச்சை மிளகாய் சேர்த்து வறுத்து இறக்கிக் கொள்ள வேண்டும்.

வறுத்த பொருட்கள் அனைத்தும் குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு தேங்காய், புளி, மஞ்சள் தூள், உப்பு மற்றும் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதனை ஒரு பௌலில் ஊற்றி, அதில் கடுகை எண்ணெயில் போட்டு தாளித்து, அத்துடன் சேர்த்தால், சூப்பரான கறிவேப்பிலை சட்னி ரெடி!!! இதனை இட்டி, தோசையுடன் சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.

குறிப்பு:

வேண்டுமானால், இந்த சட்னியில் உளுத்தம் பருப்பிற்கு பதிலாக கடலைப் பருப்பையும், பச்சை மிளகாய்க்கு பதிலாக வரமிளகாயை சேர்த்தும் செய்யலாம். இதுவும் வித்தியாசமான சுவையைக் கொடுக்கும்.

English summary

Curry Leaves Chutney Recipe

Curry Leaves Chutney is very easy to prepare in the morning time. Here is the recipe. Take a look.
Story first published: Monday, September 30, 2013, 19:28 [IST]
Desktop Bottom Promotion