For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உருளைக்கிழங்கு சீரக வறுவல்

By Maha
|

உருளைக்கிழங்கு பற்றி சொல்லவே வேண்டாம். இதற்கு அத்துனை பிரியர்கள். பெரும்பாலான வீடுகளில் உருளைக்கிழங்கை வைத்து தான் பொரியல், அவியல், வறுவல் போன்றவற்றை செய்வார்கள். ஏனெனில் உருளைக்கிழங்கு குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே விரும்பி சாப்பிடக் கூடியது.

அத்தகைய உருளைக்கிழங்கை பல சுவைகளில் சமைக்கலாம். அத்தகையவற்றில் ஒன்றான உருளைக்கிழங்கு சீரக வறுவலை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Cumin Flavored Stir Fried Potatoes

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 5 (வேக வைத்து தோலுரித்து நறுக்கியது)
வெங்காயம் - 2 (நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பச்சை/வர மிளகாய் - 3 (நீளமாக கீறியது)
கடுகு - 1/2 டீஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிது
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் சற்று தாராளமாக எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம், கறிவேப்பிலை, மிளகாய் சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் நறுக்கி வைத்துள்ள வெங்காயத்தை சேர்த்து சிறிது நேரம் வதக்கி, வேக வைத்துள்ள உருளைக்கிழங்கை சேர்த்து, நன்கு 10 நிமிடம் வதக்கிவிட வேண்டும்.

பின்பு அதில் உப்பு, மஞ்சள் தூள் மற்றும் சீரகப் பொடி சேர்த்து 4-5 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து, உருளைக்கிழங்கு பார்ப்பதற்கு நன்கு மொறுமொறுவென்று வந்ததும், அடுப்பை அணைத்து அதனை இறக்கி விட வேண்டும்.

இப்போது சுவையான உருளைக்கிழங்கு சீரக வறுவல் ரெடி!!! இதனை சாம்பார் அல்லது ரசம் சாதத்திற்கு தொட்டு சாப்பிட்டால் நன்றாக இருக்கும்.

English summary

Cumin Flavored Stir Fried Potatoes | உருளைக்கிழங்கு சீரக வறுவல்

When you are running late and want to prepare an easy recipe using potatoes, you can try the cumin flavored stir fried potatoes. There are many methods to prepare this Indian side dish recipe. Try this recipe, if you are looking to prepare simple potato stir fry. It has minimal ingredients and tastes crisp and delicious too.
Story first published: Monday, April 15, 2013, 13:25 [IST]
Desktop Bottom Promotion