For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் சாலட்

By Maha
|

கோடையில் உடல் வறட்சி அதிகம் இருக்கும். எனவே இத்தகைய வறட்சியை தவிர்க்க தண்ணீரை மட்டும் அதிகம் குடிப்பதற்கு பதிலாக, நீர்ச்சத்து அதிகம் உள்ள பழங்களையும் அதிகம் சாப்பிட்டால், உடல் வறட்சியை போக்குவதோடு, வயிறும் நிறையும்.

அதிலும் பழங்களில் வெள்ளரிக்காயில் அதிகமான அளவில் நீர்ச்சத்து நிறைந்துள்ளது. அத்தகைய வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக சாலட் போல் செய்து சாப்பிடலாம். அதை எப்படி சாலட் செய்துவதென்று பார்ப்போமா!!!

Cucumber Salad: Healthy Recipe

தேவையான பொருட்கள்:

வெள்ளரிக்காய் - 2
தக்காளி - 1
வெங்காயம் - 1 (வேண்டுமென்றால்)
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
கருப்பு உப்பு - தேவையான அளவு

செய்முறை:

வெள்ளரிக்காயை தோல் சீவி, பின் அதன் நறுக்கிக் கொள்ள வேண்டும்.

பின்னர் தக்காளி மற்றும் வெங்காயத்தை துருவியது போல் நறுக்கி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்துள்ள அனைத்தையும் ஒரு பௌலில் போட்டு, அதில் எலுமிச்சை சாறு, சாட் மசாலா, மிளகு தூள் மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

இப்போது நொடியில் வெள்ளரிக்காய் சாலட் ரெடி!!!

English summary

Cucumber Salad: Healthy Recipe | வெள்ளரிக்காய் சாலட்

Cucumber salad is a healthy and filling dish that can be consumed as a snacks. Most of the dieters prefer salads as they are healthy, nutritious and most importantly, low in fats and has more water content. As the summer vegetable is in the market, you can try this crunchy and filling recipe.
Story first published: Friday, April 5, 2013, 17:33 [IST]
Desktop Bottom Promotion