For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வெள்ளரிக்காய் சன்னா தால் ரெசிபி

By Maha
|

கடலைப்பருப்பு மற்றும் வெள்ளரிக்காய் கொண்டு செய்யப்படும் பருப்பு ரெசிபி மிகவும் சுவையாக இருப்பதோடு, ஆரோக்கியமான ஒரு உணவாகவும் இருக்கும். அதுமட்டுமின்றி, இதில் வெள்ளரிக்காய் சேர்த்து செய்வதால், மற்ற ரெசிபிக்களை விட, இதன் சுவை சற்று தனித்திருக்கும். நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் சிறந்த ரெசிபி. மேலும் ஈஸியாக செய்யக்கூடியது.

சரி, இப்போது அந்த வெள்ளரிக்காய் சன்னா தால் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Cucumber Chana Dal Recipe

தேவையான பொருட்கள்:

கடலைப்பருப்பு - 1 கப் (நீரில் 1 மணிநேரம் ஊற வைத்தது)
வெள்ளரிக்காய் - 1 (பொடியாக நறுக்கியது)
சீரகம் - 1 டீஸ்பூன்
இஞ்சி பேஸ்ட் - 1 டீஸ்பூன்
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 3 கப்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)

செய்முறை:

முதலில் கடலைப்பருப்பை நீரில் நன்கு கழுவி, பின் அதனை குக்கரில் போட்டு, உப்பு, மஞ்சள் தூள் மற்றும் தண்ணீர் சேர்த்து அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

பின் அதனை இறக்கி, விசில் போனதும் குக்கரை திறந்து, கொண்டைக்கடலையை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம் சேர்த்து தாளித்து, இஞ்சி பேஸ்ட், பச்சை மிளகாய், மிளகாய் தூள் சேர்த்து கிளறி, பிறகு வேக வைத்துள்ள கடலைப்பருப்பை சேர்த்து 3-4 நிமிடம் தீயை குறைவில் வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்பு நறுக்கி வைத்திருக்கும் வெள்ளரிக்காய் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து 10 நிமிடம் குறைவான தீயிலேயே வேக வைத்து இறக்கி, அதன் மேல் கொத்தமல்லியை தூவி அலங்கரித்தால், சுவையான வெள்ளரிக்காய் சன்னா தால் ரெடி!!!

English summary

Cucumber Chana Dal Recipe

Cucumber chana dal is a simple and healthy recipe. The Bengal gram is a nutritious lentil and when combined with cucumber it tastes heavenly. But the dish is filled with a unique flavour of cucumber which makes it simply hard to resist. So, check out the recipe of cucumber chana dal and give it a try!
Story first published: Monday, November 18, 2013, 11:30 [IST]
Desktop Bottom Promotion