For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக் கீரை கச்சோரி

By Maha
|

கச்சோரியில் பல வகைகள் உள்ளன. அவற்றில் வித்தியாசமான ஒரு கச்சோரி தான் பசலைக் கீரை கச்சோரி. இது மிகவும் ஆரோக்கியமான ஒரு ஸ்நாக்ஸ் என்று சொல்லலாம். அதிலும் இது வட இந்தியாவில் மிகவும் பிரபலமானது.

குறிப்பாக இந்த ஸ்நாக்ஸை கீரை சாப்பிட விரும்பாத குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அவர்கள் விரும்பி சாப்பிடுவார்கள். மேலும் இந்த பசலைக் கீரையில் இரும்புச்சத்து அதிகம் நிறைந்துள்ளது. எனவே இதனை மாலை வேளையில் குழந்தைகளுக்கு செய்து கொடுங்கள். இப்போது அந்த பசலைக் கீரை கச்சோரியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Crispy Spinach Kachori

தேவையான பொருட்கள்:

பசலைக் கீரை - 1 கட்டு
கோதுமை மாவு - 2 கப்
இஞ்சி - 1 டீஸ்பூன் (துருவியது)
ஓமம் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பசலைக் கீரையை சுத்தம் செய்து, அதனை ஒரு பாத்திரத்தில் போட்டு தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 5 நிமிடம் அடுப்பில் வைக்க வேண்டும்.

பின்னர் அதனை எடுத்து, ஒரு தட்டில் வைத்து, தண்ணீர் முற்றிலும் வடியும் வரை வைக்க வேண்டும்.

பிறகு பசலைக் கீரையை மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ள வேண்டும்.

பின் ஒரு பௌலில் கோதுமை மாவு, இஞ்சி, ஓமம், உப்பு, மிளகாய் தூள் மற்றும் அரைத்த பசலைக் கீரையை ஊற்றி, வேண்டுமெனில் தண்ணீர் சேர்த்து, போண்டா பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அதனை சிறு உருண்டைகளாக உருட்டி தட்டில் 5 நிமிடம் தனியாக வைக்க வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருட்டி வைத்துள்ள உருண்டையை எண்ணெயில் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போல் அனைத்து உருண்டைகளையும் பொரித்து எடுத்தால், சுவையான பசலைக் கீரை கச்சோரி ரெடி!!!

English summary

Crispy Spinach Kachori

Spinach Kachori is one of the healthiest snack recipe. You can easily prepare these crispy spinach kachoris. Check out...
Story first published: Tuesday, May 28, 2013, 16:53 [IST]
Desktop Bottom Promotion