For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பசலைக் கீரை பஜ்ஜி

By Maha
|

இதுவரை எத்தனையோ பஜ்ஜிகளைப் பார்த்திருப்போம். ஆனால் பசலைக் கீரையைக் கொண்டு பஜ்ஜி செய்திருக்கமாட்டோம். பசலைக் கீரை பஜ்ஜியானது மிகவும் எளிமையான மற்றும் வித்தியாசமான சுவையில் இருக்கும் ஒரு ஸ்நாக்ஸ் ரெசிபி. இதனை மாலை வேளையில் காபி அல்லது டீ குடிக்கும் போது, அதனுடன் செய்து சாப்பிட்டால், நன்றாக இருக்கும்.

அதிலும் பசலைக் கீரையில் நிறைய சத்துக்கள் நிறைந்திருப்பதால், இந்த பஜ்ஜியை குழந்தைகளுக்கு செய்து கொடுப்பது நல்லது. சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்க்கலாமா!!!

Crispy Palak Bajji

தேவையான பொருட்கள்:

பசலைக் கீரையின் இலை - 1 கப்
கடலை மாவு - 1 கப்
சோம்பு பொடி - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
எள் - 2 டேபிள் ஸ்பூன்
சோடா உப்பு - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
தண்ணீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பசலைக் கீரையின் இலையை நீரில் நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, மிளகாய் தூள், மல்லி தூள், சோம்பு பொடி, சீரகப் பொடி, பெருங்காயத் தூள், எள், சோடா உப்பு மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி பஜ்ஜி மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பஜ்ஜி மாவில் ஒவ்வொரு இலையையும் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இதேப் போன்று அனைத்து இலைகளையும் செய்ய வேண்டும்.

இப்போது சூப்பரான பசலைக் கீரை பஜ்ஜி ரெடி!!!

English summary

Crispy Palak Bajji

Spinach Bajji dish is made with spinach (known as palak) that is coated with besan (Bengal gram flour). Here is the recipe and treat your family with this tasty snack.
Story first published: Monday, July 1, 2013, 18:24 [IST]
Desktop Bottom Promotion