For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பாகற்காய் ப்ரை

By Maha
|

காய்கறிகளில் பெரும்பாலானோர் வெறுக்கும் ஒரு காய் தான் பாகற்காய். குறிப்பாக குழந்தைகள் பாகற்காய் என்றாலே ஓடிவிடுவார்கள். ஆனால் அந்த கசப்பான காய்கறியில் அதிக அளவில் நன்மைகள் நிறைந்துள்ளன. அதிலும் நீரிழிவு நோயாளிகளுக்கு பாகற்காய் மிகவும் சிறப்பான உணவுப் பொருள்.

உங்களுக்கு பாகற்காய் சாப்பிடும் போது கசப்பு தெரியாமல் இருக்க வேண்டுமா? அப்படியானால், இங்கு கொடுக்கப்பட்டுள்ளவாறு செய்து சாப்பிடுங்கள். இதனால் குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவார்கள். சரி, இப்போது அந்த பாகற்காய் ப்ரை ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Crispy Karela Fry Recipe With Coconut

தேவையான பொருட்கள்:

பாகற்காய் - 6 (வட்டமாக நறுக்கியது)
கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டீஸ்பூன்
கடுகு - 1/2 டீஸ்பூன்
கறிவேப்பிலைய - சிறிது
வரமிளகாய் - 3
பூண்டு - 5 பற்கள்
தேங்காய் - 1/2 கப் (துருவியது)
மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் வட்டமாக வெட்டி வைத்துள்ள பாகற்காய் துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு, அதில் உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து பிரட்டி, 10-15 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் அதில் உள்ள சாற்றினை கைகளால் பிழிந்து எடுத்துவிட வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பாகற்காய் துண்டுகளைப் போட்டு 4-5 நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

பிறகு அதனை ஒரு தட்டில் போட்டு, தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின் மிக்ஸியில் துருவிய தேங்காய், பூண்டு மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்கு பொடி செய்து கொள்ள வேண்டும்.

அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சீரகம், கடுகு, கடலைப் பருப்பு, வரமிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின்னர் பொடி செய்து வைத்துள்ள தேங்காய் பொடியை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி, பின் பொரித்து வைத்துள்ள பாகற்காயை சேர்த்து நன்கு கிளறி உப்பு தூவி பிரட்டி இறக்கினால், பாகற்காய் ப்ரை ரெடி!!!

English summary

Crispy Karela Fry Recipe With Coconut

Here is the recipe for crispy karela fry with coconut. We are sure you will love it and this recipe will definitely change your preference for this wonder vegetable.
Desktop Bottom Promotion