For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மொறுமொறுப்பான... கார்ன் ஃபிங்கர்ஸ்

By Maha
|

மாலையில் காபி குடிக்கும் போது மொறுமொப்பான ஸ்நாக்ஸ் ஏதேனும் சாப்பிடத் தோன்றுகிறதா? அப்படியெனில் சோளம் கொண்டு ஒரு அருமையான சுவையில் ஸ்நாக்ஸ் செய்து சாப்பிடுங்கள். அதிலும் கார்ன் ஃபிங்கர்ஸ் என்னும் ரெசிபி செய்வதற்கு மிகவும் ஈஸியானதாகவும், அருமையான சுவையுடனும் இருக்கும்.

இப்போது இங்கு அந்த கார்ன் ஃபிங்கர்ஸ் ரெசிபியைத் தான் பார்க்கப் போகிறோம். என்ன ரெடியா!!!

Crispy Corn Fingers Recipe

தேவையான பொருட்கள்:

கார்ன்/சோளம் - 1 கப் (வேக வைத்து மசித்தது)
பால் - 1 கப்
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து மசித்தது)
சீஸ் - 2 டேபிள் ஸ்பூன் (துருவியது)
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சோள மாவு - 1 டேபிள் ஸ்பூன்
பச்சை மிளகாய் - 2
மிளகு தூள் - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
தண்ணீர் - 1/2 கப்
பிரட் தூள் - 1/2 கப்
வெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருக வைத்து, பின் அதில் மசித்து வைத்துள்ள சோளம், உப்பு, பால் சேர்த்து, தீயை குறைவில் வைத்து 6-7 நிமிடம் பால் முற்றிலும் சுண்டும் வரை கிளறி விட வேண்டும்.

பின்னர் அதனை இறக்கி, ஒரு பௌலில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்பு அதில் மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு, மிளகு தூள், பச்சை மிளகாய், சீஸ், கொத்தமல்லி மற்றும் சீரகப் பொடி சேர்த்து, கையால் நன்கு பிசைந்து, அதனை படத்தில் காட்டப்பட்டிருப்பது போன்று செய்து, 15 நிமிடம் ஃப்ரிட்ஜில் வைக்க வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடேற்ற வேண்டும்.

அதற்குள் ஒரு பௌலில் மைதா, சோள மாவு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து ஓரளவு கெட்டியான மாவு போல் கலந்து கொள்ள வேண்டும்.

இறுதியில் ப்ரிட்ஜில் வைத்துள்ளவற்றை வெளியே எடுத்து, அதனை ஒவ்வொன்றாக மைதா மாவில் நனைத்து, பின் பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான கார்ன் ஃபிங்கர்ஸ் ரெடி!!!

English summary

Crispy Corn Fingers Recipe

Crispy corn fingers are an excellent tea time snack with the goodness of corn and the mushy taste of cheese inside. The recipe for crispy corn fingers is extremely easy. So, here is the lip-smacking recipe of crispy corn fingers. Do give it a try.
Story first published: Wednesday, September 25, 2013, 16:58 [IST]
Desktop Bottom Promotion