For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பேபி உருளைக்கிழங்கு வறுவல்

By Maha
|

குளிர்காலத்தில் பேபி உருளைக்கிழங்குகளின் சீசன் என்பதால், உருளைக்கிழங்கு பிரியர்கள் இந்த மாதத்தில் உருளைக்கிழங்கை பலவாறு சமைத்து சாப்பிட்டு மகிழுங்கள். அதிலும் பேபி உருளைக்கிழங்கின் ஸ்பெஷல் என்னவென்றால், இதன் தோலை உரிக்காமலேயே சாப்பிடலாம். இங்கு அந்த பேபி உருளைக்கிழங்கை எப்படி சூப்பரான முறையில் வறுவல் செய்வதென்று கொடுத்துள்ளோம்.

அதனை படித்து, வீட்டில் முயற்சி செய்து பார்த்து, எப்படி இருந்தது என்று எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். சரி, அந்த ரெசிபியின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Crisp Baby Potatoes Fry Recipe

தேவையான பொருட்கள்:

பேபி உருளைக்கிழங்கு - 8-10
பச்சை மிளகாய் - 2-3 (நீளமாக கீறியது)
வெங்காயம் - 2
தக்காளி - 1
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மல்லி தூள் - 1 டீஸ்பூன்
கரம் மசாலா - 1 சிட்டிகை
சீரகம் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1/2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பேபி உருளைக்கிழங்கை நன்கு கழுவி, நீரை முற்றிலும் வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருளைக்கிழங்கைப் போட்டு, 4-5 நிமிடம் தீயை குறைவில் வைத்து பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

அதே சமயம், மிக்ஸியில் வெங்காயம் மற்றும் தக்காளியை தனித்தனியாக போட்டு அரைத்துக் கொள்ள வேண்டும்.

உருளைக்கிழங்கானது நன்கு பொன்னிறமான பின்னர், தீயை குறைத்து, உருளைக்கிழங்கை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்பு அதே வாணலியில் உள்ள எண்ணெயில் சீரகத்தைப் போட்டு தாளித்து, அரைத்து வைத்துள்ள வெங்காயத்தைப் முதலில் சேர்த்து 3-4 நிமிடம் வதக்க வேண்டும். பின் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து கிளறி விட வேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய் போட்டு லேசாக வதக்கி, அரைத்து வைத்துள்ள தக்காளியை ஊற்றி, மீண்டும் 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.

பிறகு அதில் மிளகாய் தூள், மல்லி தூள் மற்றும் கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி, பொரித்து வைத்துள்ள பேபி உருளைக்கிழங்கை சேர்த்து, மசாலாக்கள் அனைத்தும் உருளைக்கிழங்கில் சேரும் வரை நன்கு கிளறி இறக்கினால், சுவையான பேபி உருளைக்கிழங்கு வறுவல் ரெடி!!!

English summary

Crisp Baby Potatoes Fry Recipe

Baby potatoes are available in this season. The best way to enjoy the baby potatoes is to have it without peeling them. This makes the small potatoes taste crisp and all the more delicious. Here is a quick recipe to prepare small potatoes fry. You need minimal ingredients and the recipe is quick as well. Take a look..
Story first published: Monday, December 9, 2013, 10:52 [IST]
Desktop Bottom Promotion