For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கார்ன் சப்பாத்தி

By Maha
|

காலையில் எழுந்து அருமையான முறையில் ஒரு உணவு செய்ய நினைத்தால், அதற்கு கார்ன் சப்பாத்தி சரியானதாக இருக்கும். மேலும் இந்த சப்பாத்தி ஆரோக்கியமான ஒரு உணவும் கூட. அதுமட்டுமின்றி, குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தமானதாகவும் இருக்கும்.

சரி, இப்போது அந்த கார்ன் சப்பாத்தியை எப்படி செய்வதென்று பார்ப்போமா!!!

Corn Chapathy For Breakfast

தேவையான பொருட்கள்:

கோதுமை மாவு - 2 கப்
சோள மணிகள் - 1 கப் (வேக வைத்து மசித்தது)
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
உருளைக்கிழங்கு - 1 (வேக வைத்து மசித்தது)
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 கப்

செய்முறை:

முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு, உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து, சப்பாத்தி மாவு பதத்திற்கு நன்கு மென்மையாக பிசைந்து, ஈரத்துணியால் மூடி ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெங்காயத்தை சேர்த்து தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக வதக்க வேண்டும்.

பின்பு மசித்து வைத்துள்ள உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தை சேர்த்து 4-5 நிமிடம் வதக்கி, பச்சை மிளகாய், சீரகத் தூள், உப்பு மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து கிளறி, 7-8 நிமிடம் தீயை குறைவில் வைத்து வதக்கி, அடுப்பில் இருந்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.

அடுத்து ஊற வைத்துள்ள மாவை, சிறு உருண்டைகளாக்கிக் கொள்ளவும்.

பின் ஒரு உருண்டையை எடுத்து, அதை சப்பாத்தி போன்று தேய்த்து, அதன் நடுவே குளிர வைத்துள்ள கார்ன் கலவையை சிறிது வைத்து மூடி, மீண்டும் சப்பாத்திகளாக தேய்த்து ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும். இதேப் போன்று அனைத்து மாவையும் செய்து கொள்ளவும்.

இறுதியில் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும், தேய்த்து வைத்துள்ள சப்பாத்திகளை போட்டு, எண்ணெய் ஊற்றி முன்னும் பின்னும் வேக வைத்து எடுத்தால், சூப்பரான கார்ன் சப்பாத்தி ரெடி!!!

English summary

Corn Chapathy For Breakfast

Corn Chapathy is a tasty and a filling option for breakfast. Boiled sweet corn is a perfect option to start your day on a healthy note since it has a numerous health benefits. Here goes the recipe for corn chapathy. Give it a try.
Story first published: Thursday, July 25, 2013, 19:30 [IST]
Desktop Bottom Promotion