For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சில்லி கொத்தமல்லி ஃப்ரைடு ரைஸ்

By Maha
|

நிறைய பேருக்கு சைனீஸ் ரெசிபிக்களில் ஒன்றான ஃப்ரைடு ரைஸ் என்றால் மிகவும் பிடிக்கும். ஏனெனில் அத்தகைய ஃப்ரைடு ரைஸில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் ஒன்று தான் மிளகாய் மற்றும் கொத்தமல்லியைக் கொண்டு செய்யப்படும் ஒரு ஃப்ரைடு ரைஸ். இது மிகவும் காரமான ரெசிபியாகும்.

மேலும் எளிதில் செய்யக்கூடிய ரெசிபியும் கூட. அதுமட்டுமின்றி காலையில் எழுந்து செய்வதற்கும் ஏற்றது. சரி, இப்போது அந்த சில்லி கொத்தமல்லி ஃப்ரைடு ரைஸ் ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chilli Coriander Fried Rice Recipe

தேவையான பொருட்கள்:

அரிசி - 2 கப்
தண்ணீர் - 4 கப்
பூண்டு - 6-7 பற்கள்
சிவப்பு மிளகாய் - 1 (நீளமாக கீறியது)
பச்சை மிளகாய் - 4 (நறுக்கியது)
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
கொத்தமல்லி - 4 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் அரிசியை கழுவி, நீரை நன்கு வடித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் அரிசியைப் போட்டு தண்ணீர் ஊற்றி, குக்கரை மூடி 2-3 விசில் விட்டு இறக்க வேண்டும்.

விசிலானது போனதும், குக்கரை திறந்து சாதத்தை தட்டில் போட்டு குளிர வைக்க வேண்டும்.

பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பூண்டு சேர்த்து வதக்க வேண்டும்.

பின் சிவப்பு மிளகாய், பச்சை மிளகாய் சேர்த்து, 1 நிமிடம் வதக்க வேண்டும்.

அடுத்து சோயா சாஸ், சாதம், உப்பு, கொத்தமல்லி சேர்த்து, 4-5 நிமிடம் நன்கு கிளறி இறக்கினால், சுவையான சில்லி கொத்தமல்லி ஃப்ரைடு ரைஸ் ரெடி!!!

குறிப்பு:

இதில் சிறிது பட்டாணி, கேரட் போன்றவற்றையும் வேக வைத்து சேர்த்துக் கொள்ளலாம்.

English summary

Chilli Coriander Fried Rice Recipe

Chilli coriander fried rice recipe is prepared with a fiery combination of the red and green chillies. If you love to eat spicy food, then this is one of the best recipes you can try out for lunch/dinner. So, check out the recipe of chilli coriander fried rice and do give it a try.
Story first published: Monday, October 28, 2013, 17:51 [IST]
Desktop Bottom Promotion