For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீஸ் கார்ன் ஸ்பிரிங் ரோல்

By Maha
|

Cheese Corn Spring Roll Recipe
இதுவரை ஸ்பிரிங் ரோலை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்போம். ஆனால் தற்போது அந்த ஸ்பிரிங் ரோலில் ஒரு வகையான சீஸ் கார்ன் ஸ்பிரிங் ரோலை வீட்டிலேயே ஈஸியாக செய்யலாம். இது ஒரு சிறந்த ஈவினிங் ஸ்நாக்ஸ். இப்போது அதன் செய்முறையை பார்ப்போமா!!!

தேவையான பொருட்கள்:

ஸ்பிரிங் ரோல் ஷீட் - 8
சீஸ் - 2 கப் (துருவியது)
சோள மணிகள் - 1 கப் (கழுவியது)
மிளகு தூள் - 1 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் சீஸ், சோள மணிகள், உப்பு மற்றும் மிளகுத் தூள் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின் ஒரு தட்டில் ஸ்பிரிங் ரோல் ஷீட்டை வைத்து, அதன் ஒரு ஓரத்தில் அந்த சீஸ் கலவையை வைத்து, ரோல் போன்று சுருட்டி, முனைகள் நன்கு மடக்கிவிட வேண்டும்.

அவ்வாறு அந்த ஷீட்டை மடக்கும் போது, தண்ணீரை விரல்களில் தொட்டு மடக்கினால், உள்ளிருக்கும் கலவை வெளிவராதவாறு நன்கு ஒட்டிக் கொள்ளும். இதேப் போன்று அனைத்து ஷீட்டுகளையும் செய்ய வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி, நன்கு காய வைக்க வேண்டும்.

எண்ணெயானது நன்கு சூடானதும், தீயை குறைவில் வைத்து, அதில் அந்த ஸ்பிரிங் ரோல்களை போட்டு, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான சீஸ் கார்ன் ஸ்பிரிங் ரோல் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், சூப்பராக இருக்கும்.

English summary

Cheese Corn Spring Roll Recipe | சீஸ் கார்ன் ஸ்பிரிங் ரோல்

The cheese and corn spring rolls can be a great snack for the evening. You can prepare this fried Chinese snack in very little time. Check out the recipe.
Story first published: Wednesday, January 2, 2013, 17:59 [IST]
Desktop Bottom Promotion