For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சீஸ் கார்ன் பால்ஸ்

By Maha
|

வீட்டில் மதிய வேளையில் சமைத்த சாதம் இருந்தால், அப்போது அதில் சீஸ் மற்றும் கார்ன் சேர்த்து அருமையான முறையில் ஒரு எளிய ஸ்நாக்ஸை, மாலை வேளையில் செய்து சாப்பிடலாம்.

அந்த சீஸ் கார்ன் பால்ஸ் ரெசிபியின் செய்முறையை தெரிந்து கொள்ள வேண்டுமெனில், கீழே படித்து பாருங்கள்.

Cheese Corn Balls

தேவையான பொருட்கள்:

சீஸ் - 3 டேபிள் ஸ்பூன் (துருவியது)
சோள மணிகள் - 1 கப் (லேசாக அரைத்தது)
வெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
பால் - 1 கப்
பச்சை மிளகாய் - 1 டேபிள் ஸ்பூன் (பொடியாக நறுக்கியது)
மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
சாதம் - 1 கப்
கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
பிரட் தூள் - 2 டேபிள் ஸ்பூன் மற்றும் தனியாக சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் போட்டு உருகியதும், மைதாவை போட்டு 1 நிமிடம் கிளறி விட வேண்டும். பின் அதில் பால் ஊற்றி நன்கு கட்டி சேராதவாறு கலந்து கொண்டு, அடுப்பில் இருந்து இறக்கி, சீஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.

பின்பு அரைத்த சோள மணிகளை சேர்த்து நன்கு பிரட்டி விட வேண்டும்.

அடுத்து பச்சை மிளகாய், உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி, சாதத்தை மசித்து போட்டு, சிறிது கொத்தமல்லி மற்றும் 2 டேபிள் ஸ்பூன் பிரட் தூள் சேர்த்து நன்கு பிசைந்து, குளிர வைக்க வேண்டும்.

பிறகு ஒரு அகன்ற கடாயை அடுப்பில் வைத்து, அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசைந்து வைத்துள்ள மாவை சிறு உருண்டைகளாக உருட்டி, பிரட் தூளில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சூப்பரான சீஸ் கார்ன் பால்ஸ் ரெடி!!! இதனை தக்காளி சாஸ் உடன் சாப்பிட்டால், அருமையாக இருக்கும்.

English summary

Cheese Corn Balls

If there is leftover rice, mix them with corn and cheese and make a Delicious Cheese Corn Balls.
Story first published: Tuesday, July 16, 2013, 18:29 [IST]
Desktop Bottom Promotion