For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சட்பட்டி ஹரியாலி டிக்கி

By Maha
|

என்ன ரெசிபியோட பெயரே புரியவில்லையா? வேறொன்றும் இல்லை, இது பட்டாணி மற்றும் பசலைக்கீரையைக் கொண்டு செய்யப்படும் ஒரு சுவையான ஸ்நாக்ஸ். ஏன் சத்தான ஸ்நாக்ஸ் என்றும் சொல்லலாம். மேலும் இந்த மாதம் பட்டாணி சீசன் என்பதால், பட்டாணியை அதிகம் சமைத்து சாப்பிட்டு, அதன் நன்மைகளைப் பெறலாம்.

இப்போது அந்த சுவையான சட்பட்டி ஹரியாலி டிக்கி ரெசிபியை எப்படி செய்வதென்று பார்ப்போம்.

Chatpati Hariyali Tikki Recipe

தேவையான பொருட்கள்:

பசலைக்கீரை - 1/2 கட்டு
பச்சை பட்டாணி - 1 கப் (வேக வைத்தது)
உருளைக்கிழங்கு - 2 (வேக வைத்து தோலுரித்தது)
பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
இஞ்சி - 1/2 இன்ச் (பொடியாக நறுக்கியது)
சோள மாவு - 1/2 கப்
சாட் மசாலா - 1 டீஸ்பூன்
சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
கொத்தமல்லி - 2 டேபிள் ஸ்பூன் (நறுக்கியது)
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் பசலைக்கீரையை உப்பு கலந்த நீரில் நன்கு கழுவி, ஒரு பாத்திரத்தில் போட்டு, 1/2 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து, தீயை குறைவில் வைத்து 7-8 நிமிடம் வேக வைத்து இறக்கி, நீரை வடிகட்டி தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர் மற்றொரு பாத்திரத்தில் வேக வைத்துள்ள உருளைக்கிழங்கு, பச்சை பட்டாணி, பசலைக்கீரை, இஞ்சி, பச்சை மிளகாய், சாட் மசாலா, சீரகப் பொடி, உப்பு, சோள மாவு, கொத்தமல்லி சேர்த்த நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.

பின்பு மசித்து வைத்துள்ள கலவையை 6-7 பாகங்களாக பிரித்து, ஒவ்வொன்றையுட்ம உருண்டைகளாக்கி, லேசாக தட்டி ஒரு தட்டில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இறுதியில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், தட்டி வைத்துள்ள டிக்கியை போட்டு, முன்னும் பின்னும் பொன்னிறமாக பொரித்து எடுத்தால், சுவையான சட்பட்டி ஹரியாலி டிக்கி ரெடி!!!

English summary

Chatpati Hariyali Tikki Recipe

Chatpati hariyali tikki is a tangy snack recipe which is a must try for vegetarians as well as non vegetarians.
Story first published: Thursday, November 14, 2013, 17:18 [IST]
Desktop Bottom Promotion