For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

முந்திரி சட்னி

By Maha
|

இதுவரை எத்தனையோ சட்னிக்களை முயற்சி செய்திருப்பீர்கள். ஆனால் முந்திரி சட்னியை செய்ததுண்டா? இது மிகவும் அருமையான மற்றும் ஈஸியான சட்னி. அதுமட்டுமின்றி இது மிகவும் ஆரோக்கியமான ரெசிபியும் கூட. அதிலும் இந்த சட்னியானது இட்லி மற்றும் தோசைக்கு நன்றாக இருக்கும்.

இங்கு அந்த முந்திரி சட்னியின் செய்முறையானது கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்துப் பாருங்கள்.

Cashew Chutney Recipe

தேவையான பொருட்கள்:

முந்திரி - 1 கப்
வரமிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 6 (பொடியாக நறுக்கியது)
புளி - சிறிது
உப்பு - தேவையான அளவு
தேங்காய் எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

செய்முறை:

முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் தேங்காய் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், முந்திரியை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.

பின்னர் அதில் வரமிளகாய் சேர்த்து லேசாக வதக்கி அடுப்பில் இருந்து இறக்க வேண்டும்.

பிறகு கலவையானது குளிர்ந்ததும், அதனை மிக்ஸியில் போட்டு, அத்துடன் வெங்காயம், புளி மற்றும் உப்பு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி மென்மையாக அரைத்தால், முந்திரி சட்னி ரெடி!!!

English summary

Cashew Chutney Recipe

Try this creamy cashew chutney recipe for breakfast. It goes well even with wheat rotis. Delicious and creamy to dip your dosa or idli in too!
Story first published: Friday, August 1, 2014, 18:31 [IST]
Desktop Bottom Promotion