For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

குடைமிளகாய் போண்டா

By Maha
|

மழைக் காலத்தில், மாலை வேளையானது மிகுந்த குளிர்ச்சியுடன் இருக்கும். அந்த நேரத்தில் டீ அல்லது காபியுடன், பஜ்ஜி, போண்டா போன்றவற்றை சாப்பிட வேண்டுமென்று தோன்றும். இதுவரை எத்தனையோ போண்டாக்களை வீட்டில் செய்திருப்போம். ஆனால், வைட்டமின் சி அதிகம் நிறைந்திருக்கும் குடைமிளகாய் கொண்டு போண்டா செய்திருப்போமா!

ஆம், குடைமிளகாய் கொண்டும் போண்டா செய்யலாம். அதிலும் இது செய்வது மிகவும் எளிது. கீழே அந்த குடைமிளகாய் போண்டாவின் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சாப்பிட்டு மகிழுங்கள்.

Capsicum Bonda Recipe

தேவையான பொருட்கள்:

குடைமிளகாய் - 1-2 (சிறியது)
கடலை மாவு - 2 டேபிள் ஸ்பூன்
அரிசி மாவு - 1/2 டேபிள் ஸ்பூன்
பேக்கிங் பவுடர் - 1 சிட்டிகை
மிளகாய் தூள் - 1 சிட்டிகை
மஞ்சள் தூள் - 1 சிட்டிகை
பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)

செய்முறை:

முதலில் ஒரு பௌலில் கடலைமாவு, அரிசி மாவு, பேக்கிங் பவுடர், மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத் தூள் மற்றும் உப்பு சேர்த்து, தண்ணீர் ஊற்றி போண்டா மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ள வேண்டும்.

பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், குடைமிளகாயை பிசைந்து வைத்துள்ள போண்டா மாவில் பிரட்டி, எண்ணெயில் போட்டு, தீயை குறைவில் வைத்து, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். அதிலும் 5-8 நிமிடம் இருப்பது நல்லது. இதனால் குடமிளகாய் நன்கு வெந்திருக்கும். இதேப் போன்று மற்றொரு குடைமிளகாயையும் பொரித்து எடுக்க வேண்டும்.

இப்போது சுவையான குடைமிளகாய் போண்டா ரெடி!!! அதன்பின் அதனை நான்கு பகுதிகளாக வெட்டி, அதனை விருப்பமான சட்னியுடன் தொட்டு சாப்பிட்டால் சூப்பராக இருக்கும்.

குறிப்பு:

இந்த குடைமிளகாய் போண்டாவில், குடைமிளகாயை துண்களாக்கியும் போண்டா செய்யலாம்.

English summary

Capsicum Bonda Recipe

In rainy season we would like to have bond, bajji such a kind of foods. Isn't it? So here we have given the capsicum bonda recipe. This bonda is very easy to make, try it.
Story first published: Friday, June 28, 2013, 16:45 [IST]
Desktop Bottom Promotion