For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கர்ப்பிணிகளுக்காக... முட்டைகோஸ் ரவை உப்புமா

By Maha
|

காலை உணவு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்று. அது தான் ஒருநாளைக்குத் தேவையான அனைத்து ஆற்றலையும் தரும். குறிப்பாக கர்ப்பிணிகள் தவறாமல் காலை உணவை சாப்பிட வேண்டும். அதிலும் உடலுக்கு ஆரோக்கியத்தைத் தரும் உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதுவும் ரவையைக் கொண்டு உப்புமா செய்து சாப்பிட்டால், அதில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான வைட்டமின்கள் மற்றும் புரோட்டீன்கள் கிடைக்கும்.

மேலும் எப்போதும் ஒரே மாதிரி உப்புமா செய்யாமல், சற்று வித்தியாசமாக ரவையுடன் முட்டைகோஸ் சேர்த்து உப்புமா செய்யலாம். இப்போது அந்த முட்டைகோஸ் ரவை உப்புமாவின் செய்முறையைப் பார்ப்போமா!!!

Cabbage Rava Upma Recipe For Pregnant Women

தேவையான பொருட்கள்:

ரவை - 2 கப்
முட்டைகோஸ் - 1/2 கப் (நறுக்கியது)
கடுகு - 1/2 டேபிள் ஸ்பூன்
சீரகம் - 1/2 டேபிள் ஸ்பூன்
உளுத்தம் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
கடலைப் பருப்பு - 1/2 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 3
கறிவேப்பிலை - சிறிது
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டேபிள் ஸ்பூன்
முந்திரி - 20 கிராம் (நறுக்கியது)
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு

செய்முறை:

முதலில் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு, சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.

பின் அதில் உளுத்தம் பருப்பு, வரமிளகாய் மற்றும் கடலைப் பருப்பு சேர்த்து பொன்னிறமாக வறுத்து, இஞ்சி பூண்டு பேஸ்ட், மிளகாய் தூள் சேர்த்து வதக்கி விட வேண்டும்.

அடுத்து முட்டைகோஸ் சேர்த்து, முட்டைகோஸ் வேகும் வரை மூடி வைத்து வேக வைக்க வேண்டும்.

பின்பு அதில் முந்திரி மற்றும் 1 1/2 கப் தண்ணீர் சேர்த்து கலந்து, நன்கு கொதிக்க விட வேண்டும்.

தண்ணீரானது நன்கு கொதித்ததும், அதில் ரவை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கிளறி, தீயை குறைவில் வைத்து தண்ணீர் வற்றும் வரை அடுப்பில் வைத்து இறக்க வேண்டும்.

இப்போது சுவையான முட்டைகோஸ் ரவை உப்புமா ரெடி!!!

English summary

Cabbage Rava Upma Recipe For Pregnant Women

Rava which is the other ingredient present in the recipe, is yet another source which is rich in vitamins and proteins for pregnant women. Therefore, this cabbage rava upma recipe serves as a good source of food for pregnant women. Lets take a look as to how to prepare this cabbage rava upma.
Story first published: Thursday, September 12, 2013, 19:38 [IST]
Desktop Bottom Promotion